இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரும் ஆல்ரவுண்டருமான ஹர்பஜன் சிங் தற்போது கிரிக்கெட்டிலிருந்து சினிமா பக்கம் திரும்பியுள்ளார். முன்னதாக தமிழ் சினிமாவில் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா எழுதி இயக்கியிருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக விஜய் டிவியின் பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் சதீஷ் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோருடன் இணைந்து ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சேன்ட்டோ ஃபிலிம்ஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் JPR மற்றும் ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்திற்கு C.சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய தீபக்.S.துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் Sneak Peek வீடியோ வெளியானது. ஆக்சன் கிங் அர்ஜுனின் அதிரடியான சண்டைக் காட்சியோடு தொடங்கும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் முதல் பத்து நிமிட வீடியோ காட்சி தற்போது யூ-ட்யூப்பில் வெளியாகி உள்ளது.அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.