தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த கொலைகாரன் திரைப்படம் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி உள்ளிட்ட விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகிவருகின்றன.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையில் N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிப்பில், இன்ஃபினிட்டி ஃபிலிம் வெனட்சர்ஸ் வழங்கும் கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.