இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..

தளபதி 67 படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்ப்ளிக்ஸ் - Thalapathy 67 OTT rights bagged by Netflix | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘தளபதி 67’. பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் நடிகை திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கின்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டுகளை கடந்த இரண்டு நாட்களாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன் படி படத்தில் நடிக்கவிருந்த நடிகர்கள் பட்டியல், பட உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் தளபதி 67 திரைப்படத்தின் பட பூஜை பிரத்யேக வீடியோ என தொடர்ந்து அப்டேட்டுகளை விட்டபடி இருந்தது, இதையடுத்து ரசிகர்கள் கடந்த மூன்று நாட்களாக இணையத்தை திக்குமுக்காட வைத்து வருகின்றனர்,

இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் ஒளிப்பரப்பு உரிமையை பிரபல ஒடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. மிகப்பெரிய படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதையடுத்து படக்குழு பகிர்ந்த அறிவிப்பை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர் தளபதி 67 ரசிகர்கள்.

மேலும் இதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்க காத்துட்டு இருந்த அப்டேட் இதோ வந்துடுச்சு! இது கொண்டாட்டத்திற்கான துவக்கமாக இருக்கட்டும். ஏனென்றால் தளபதி வருகிறார்” என்று குறிப்பிட்டு இருந்தது.

Neenga kaathutu iruntha update itho vanthuduchu! It is time to cue the beat and start the celebrations, because Thalapathy is on his way! 🤩💥🤩💥#Thalapathy67 is coming to Netflix as a post theatrical release, and we're literally jumping! 🕺 pic.twitter.com/gpliqvU3rV

— Netflix India South (@Netflix_INSouth) February 2, 2023

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகிய  'பீஸ்ட்' திரைப்படத்தின் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நெட்பிளிக்ஸ் சார்பில் நெட்ப்ளிக்ஸ் பண்டிகை என்று ஒரு பட்டியலை வெளியிட்டது. அதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்ற வரும் காலங்களில் தமிழ் திரையுலகில் வரவிருக்கும் திரைப்படங்களை அறிவித்திருந்தது.

அதில் AK62, வாத்தி, தங்கலான், மாமன்னன், ஜிகர்தண்டா : பாகம் 2, சந்திரமுகி : பாகம் 2, ஜப்பான், இறைவன் ஆகிய பல படங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில் தளபதி 67 திரைப்படமும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களை குதுகலபடுத்தியுள்ளது. மேலும் தளபதி 67 படத்தின் பாடல் மற்றும் இசை உரிமத்தை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் மற்றும் தொலைகாட்சி ஒளிப்பரப்பு உரிமத்தை சன் தொலைக்காட்சியும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

விரைவில் பிச்சைக்காரன் 2.. உடல் நலம் குறித்த தகவலை ரசிகருக்கு பகிர்ந்த விஜய் ஆண்டனி – வைராலாகும் பதிவு..
சினிமா

விரைவில் பிச்சைக்காரன் 2.. உடல் நலம் குறித்த தகவலை ரசிகருக்கு பகிர்ந்த விஜய் ஆண்டனி – வைராலாகும் பதிவு..

தொடர்ந்து சோசியல் மீடியாவை கன்ட்ரோலில் வைத்திருக்கும் தளபதி 67... ட்ரெண்டாகும் படப்பூஜையின் புது புகைப்படங்கள் இதோ!
சினிமா

தொடர்ந்து சோசியல் மீடியாவை கன்ட்ரோலில் வைத்திருக்கும் தளபதி 67... ட்ரெண்டாகும் படப்பூஜையின் புது புகைப்படங்கள் இதோ!

பா ரஞ்சித்தின் ‘பொம்மை நாயகி’ படத்தின் புது அப்டேட் – ரசிகர்களை கவர்ந்து வரும் Special Glimpse..
சினிமா

பா ரஞ்சித்தின் ‘பொம்மை நாயகி’ படத்தின் புது அப்டேட் – ரசிகர்களை கவர்ந்து வரும் Special Glimpse..