அஜித்துடன் கூட்டணி இல்லை!.. மறைமுகமாக தெரிவித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என அறிவிப்பு - Vignesh shivan confirms is not to direct Ak 62 | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான உச்ச நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜித்தின் திரைப்படம் வெளியாகும் நாள் திருவிழாவாகவே காட்சியளிக்கும். வர்த்தக ரீதியாகவும் அஜித் திரைப்படங்களுக்கு தனி மார்கெட் உண்டு. அதன் படி அஜித் திரைப்படம் என்றாலே அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எனலாம். அந்த வகையில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘துணிவு’ திரைப்படம் மிகப்பெரிய வசூல் படைத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்த நிலையிலும் பல இடங்களில் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றன.  இந்த ஆண்டின் வெளியான பிளாக் பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையை தக்கவைத்துள்ள துணிவு படத்தையடுத்து அஜித் குமார் நடிக்கபோகும்  ‘AK 62’ திரைப்படம் குறித்து கடந்த ஆண்டு  அறிவிப்பை வெளியிட்டனர். லைகா நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கவிருக்கிறார் என்று முன்னதாக அறிவித்திருந்தனர்.

We are extremely delighted & proud to associate with Mr. #AjithKumar for #AK62 💥

A @VigneshShivN directorial 🎥 & @anirudhofficial musical 🎸@LycaProductions @SureshChandraa @DoneChannel1 @ProRekha @AK62TheMovie #AK62WithLycaProductions pic.twitter.com/OfJ8YyCF5b

— Lyca Productions (@LycaProductions) March 18, 2022

இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கபடவுள்ளார் என்றும் துணிவு படத்தின் வெளியீடு பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் படம் உருவாகும் முன்பே டிஜிட்டல் உரிமம் பெற்றது பிரபல ஒடிடி நிறுவனம் நெட்ப்ளிக்ஸ். ஒரு படம் முடிந்ததும் உடனே ஒரு படத்தை தொடங்குவது அஜித் ரசிகர்களை குதுகலப்படுத்தியது. அதே நேரத்தில் விக்னேஷ் சிவனுடனான கூட்டணி புதுமையும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

We tried to stay CHILLA CHILLA but we just CANNOT! 🤩🤩#AK62 is coming on Netflix in Tamil, Telugu, Malayalam and Kannada as a post theatrical release! 🔥#NetflixPandigai #AK62 #NetflixLaEnnaSpecial pic.twitter.com/LWrBYY1eBY

— Netflix India South (@Netflix_INSouth) January 16, 2023

இந்நிலையில் அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணி உடைந்தது என்றும் அஜித் தற்போது அவரது அடுத்த இயக்குனரை தேடுகிறார் என்றும் செய்தி இணையத்தில் பரவியது. இந்த செய்தி குறித்து படக்குழு சார்பாகவும் அஜித் சார்பாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சார்பாகவும் விளக்கம் அளிக்கப்படாமலும் இருந்தது. முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோ வில் அவரது முந்தைய படங்களின் பெயருடன் AK62 பெயர் குறிப்பிட்டு இருந்தார் மேலும் அதனுடன் அஜித் புகைப்படம் ஒன்றையும் வைத்து இருந்தார். தற்போது அவர் குறிப்பிட்டு இருந்த AK62 திரைப்படத்தின் பெயரை நீக்கி உள்ளார். மேலும் அஜித் புகைப்படத்தையும் நீக்கி உள்ளார். இதன்படி அஜித் உடனான கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்து உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

lokesh kanagaraj vijay in thalapathy 67 titled leo bloody sweet

இதனையடுத்து ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியும் அவரது அடுத்த படத்திற்காக வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அஜித் தனது அடுத்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் தர வேண்டும் என்பதால் புதுமையான தரமான கதையை தேடுவதாகவும் அதற்கு அவருடைய ஆஸ்தானா இயக்குனர் விஷ்ணு வரதன் அவர்களுடன் பேசுவதாகவும் மேலும் இயக்குனர் அட்லீ யுடனும் இயக்குனர் மகிழ் திருமேனியுடனும் பேசுவதாக தகவல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. லைகா தயாரிப்பில் அஜித் நடிப்பில் AK62 படத்தை இயக்க போகும் இயக்குனர் யார் என்பதே தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதன்படி விரைவில் படத்திற்கான அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தன் படத்திற்கு கதையை தீவிரமாக தேர்ந்தேடுக்கு  அஜித்தின் அடுத்த படம் நிச்சயம் ரசிகர்களை குதுகலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..
சினிமா

இன்னும் எவ்ளோ அப்டேட் இருக்கு?.. 'தளபதி 67' படத்தின் அடுத்த அப்டேட் இதோ .. - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் படக்குழு..

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்..  Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..
சினிமா

தளபதி விஜயுடன் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்.. Surprise ஆன ரசிகர்கள்.. - மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்த நடிகர்..

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. ‘தளபதி 67’ மாஸ் அப்டேட் - அடுத்தடுத்த அப்டேட் கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..
சினிமா

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக.. ‘தளபதி 67’ மாஸ் அப்டேட் - அடுத்தடுத்த அப்டேட் கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..