கார்த்தியின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2ல் தமிழில் அறிமுகமாகும் முன்னணி நடிகை? துணிவு தயாரிப்பாளரின் அதிரடி பதில் இதோ!

பையா 2 படத்தில் ஜான்வி கபூர் என்ற வதந்திக்கு போனி கபூர் பதில்,Boney kapoor clarifies rumours on janhvi kapoor in paiya 2 movie | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் அவர்கள் தயாரித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அஜித் குமார் உடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை என அடுத்தடுத்த ஹிட் கொடுத்த போனி கபூர் துணிவு படத்தின் மூலம் ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்.

பக்கா ஆக்சன் என்டர்டெய்னராக வெளிவந்த துணிவு திரைப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாட பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளர் போனிகபூர் அவர்களின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகியாக வளர்ந்து வருகிறார்.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து தேசிய விருது பெற்ற ஹெலன் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக வெளிவந்த மில்லி, தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக குட்லக் ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் ஜானகி கபூர் நடித்திருந்தார். தொடர்ந்து பவால் மற்றும் மிஸ்டர் & மிஸஸ் மஹி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஜான்வி கபூர் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு நடிகை ஜான்வி கபூர் அறிமுகமாக இருப்பதாகவும் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து சூப்பர் ஹிட்டானா பையா திரைப்படத்தின் பார்ட் 2வாக நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகும் படத்தில் தான் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வந்தன. 

இந்நிலையில் இந்த வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள், 

"அன்பான ஊடக நண்பர்களுக்கு,
ஜான்வி கபூர் இதுவரை எந்த தமிழ் திரைப்படத்திற்கும் கமிட் ஆகவில்லை எனவே தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்"
 

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த பதிவு இதோ…
 

Dear Media Friends,

This is to bring to your notice that Janhvi Kapoor has not committed to any Tamil Films at the moment, requesting not to spread false rumors.

— Boney Kapoor (@BoneyKapoor) February 3, 2023

சிலம்பரசன்TRன் பிறந்தநாள் பரிசாக வந்த பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல்… அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பிறந்தநாள் பரிசாக வந்த பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல்… அசத்தலான வீடியோ இதோ!

அட்ரா சக்க இது லிஸ்ட்லயே இல்லையே!- பரபரக்கும் தளபதி 67 படப்பிடிப்பிற்கு புறப்பட்ட விஜய்-லோகேஷ் கனகராஜின் விமான பயண வீடியோ இதோ!
சினிமா

அட்ரா சக்க இது லிஸ்ட்லயே இல்லையே!- பரபரக்கும் தளபதி 67 படப்பிடிப்பிற்கு புறப்பட்ட விஜய்-லோகேஷ் கனகராஜின் விமான பயண வீடியோ இதோ!

புகழ்மிக்க பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான K.விஸ்வநாத் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!
சினிமா

புகழ்மிக்க பழம்பெறும் இயக்குனரும் நடிகருமான K.விஸ்வநாத் காலமானார்... சோகத்தில் திரையுலகம்!