தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுத்த லியோ படக்குழு... தளபதி 67 டைட்டில் ப்ரோமோவின் சர்ப்ரைஸ் இதோ!

தளபதி விஜயின் லியோ பட டைட்டில் அறிவிப்போடு வந்த பாடல்,thalapathy vijay in leo movie bloody sweet song | Galatta

இந்திய அளவில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியிருக்கும் தளபதி 67 படத்தின் டைட்டிலை அட்டகாசமான ப்ரோமோ வீடியோவோடு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஈகிள், குருதிப்புனல் என ஏதேதோ தலைப்புகள் தளபதி 67 படத்தின் டைட்டிலாக இருக்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த சமயத்தில் யாரும் யூகிக்க முடியாத டைட்டிலாக லியோ பிளடி ஸ்வீட் என தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்தது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்களுடன் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜய் உடன் த்ரிஷா மீண்டும் இணைந்துள்ள லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், மலையாள நடிகர் மேதீவ் தாமஸ்,, இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோருடன் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் பிலோமீன்ராஜ் படத்தொகுப்பு செய்ய அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் லியோ படத்திற்கு இசையமைக்கிறார். முன்னதாக இன்று பிப்ரவரி மூன்றாம் தேதி மாலை வெளிவந்த லியோ டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறிப்பாக இந்த ப்ரோமோ வீடியோவில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பிளடி ஸ்வீட் எனும் பாடலை லியோ படக்குழுவினர் ஸ்பெஷல் ட்ரீட்டாக கொடுத்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில், விக்ரம் திரைப்படத்தில் வேஸ்டட் பாடலை எழுதிய ஹெசென்பெர்க் இந்த பிளடி ஸ்வீட் பாடலையும் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து சித்தார்த் பஸ்ரூர் இப்பாடலை பாடியுள்ளார். அனவரது கவனத்தையும் ஈர்த்த லியோ டைட்டில் ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்று இருக்கும் அந்த பிளடி ஸ்வீட் பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்குமாரின் துணிவு பட வேற லெவல் அறிவிப்பு... கவனம் ஈர்க்கும் கலக்கலான ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்குமாரின் துணிவு பட வேற லெவல் அறிவிப்பு... கவனம் ஈர்க்கும் கலக்கலான ஸ்பெஷல் ப்ரோமோ இதோ!

சிலம்பரசன்TRன் பிறந்தநாள் பரிசாக வந்த பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல்… அசத்தலான வீடியோ இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பிறந்தநாள் பரிசாக வந்த பத்து தல படத்தின் நம்ம சத்தம் பாடல்… அசத்தலான வீடியோ இதோ!

அட்ரா சக்க இது லிஸ்ட்லயே இல்லையே!- பரபரக்கும் தளபதி 67 படப்பிடிப்பிற்கு புறப்பட்ட விஜய்-லோகேஷ் கனகராஜின் விமான பயண வீடியோ இதோ!
சினிமா

அட்ரா சக்க இது லிஸ்ட்லயே இல்லையே!- பரபரக்கும் தளபதி 67 படப்பிடிப்பிற்கு புறப்பட்ட விஜய்-லோகேஷ் கனகராஜின் விமான பயண வீடியோ இதோ!