மழை வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட போது மயங்கிய நபரை தோளில் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டினார்.

stalinதமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக  கனமழை பெய்து வருகிறது. மழை  வெள்ளத்தால்  மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்றவர்கள், நடைபாதையில் தங்கியிருப்பவர்கள், இன்னும் மோசமான நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொண்ட  அண்ணா நகர் காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி சாலையோராம் இறக்கும் தறுவாயில் மழைநீரில் மிதந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரை காப்பாற்றினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவியதையடுத்து பலர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டிவருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் பலர் பாராட்டிவருகினர்.


இது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறியதாவது : மழை பெய்யத் தொடங்கியதிலிருந்தே, மக்களுக்கான சாப்பாடு, ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்ப்பது, உணவுப் பொட்டலங்கள் வழங்குவது போன்ற உதவிகளைச் செய்து வந்தோம். ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே, ஒருவர் இறந்துகிடப்பதாக தகவல் வந்தது. தண்ணீரில் உடல் முழுவதும் ஊறிய நிலையில் மீதந்து கொண்டிந்த அவரை மீட்டேன். சம்பந்தப்பட்ட நபர், குடிபோதையில் அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். அதன்பின் சுயநினைவு இல்லாமல், தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார். பின்னர் முதலுதவிகள் செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை தூக்கி என் தோள்பட்டையில் வைத்துக்கொண்டு ஓடி வந்து, அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறினார் ராஜேஸ்வரி.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இது மக்களின் நலன் காக்கும் அரசு என்ற எண்ணத்தை மனதில் பதியவைத்து அரசு நிர்வாகத்தை சார்ந்த ஒவ்வொருவரும், அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல பருவமழை காலத்தில் நேரத்தில் மனித உயிர் காத்த தங்களின் மகத்தான பணிக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் . 

மேலும் தடகளப் போட்டிகளில் சிறந்த வீராங்கனையாக சாதனைகள் பல புரிந்ததுடன் , 1992 கும்பகோணம் மகா மகத்தின் போது ஏற்படுத்தப்பட்ட நெரிசலில் உயிருக்கு போராடியவர்களை, மீட்பதில் தாங்கள் ஆற்றிய பணி எப்பொழுதும்  நினைவில் கொள்ளத்தக்கதாகும். காவல் பணியில் எளிய மக்களின் துயர்துடைக்கும் கரங்களாக தங்களுடைய செயல்பாடு பலமுறை அமைந்துள்ளது. கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில், அவர்களை சேர்ப்பது குற்றவாளிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு , சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என தங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் பலவும், காவல்துறை உயரதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், பொதுமக்களின் வாழ்த்துக்களுக்கும், உரியவையாக அமைந்துள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சென்னை டிபி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளரான திருமதி இராஜேஸ்வரி ஆகிய தங்களின் மனிதாபிமான செயல்பாடு தங்களைப்போன்ற ,மனிதாபிமானம் கொண்ட தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும், பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனும் தாங்கள் மேற்கொண்ட பணி, காவல்துறையில் உள்ள அனைவருக்கும், பெருமையும் ,ஊக்கத்தையும் அளிக்கக்கூடியதாகும் என்றும்  தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள். சட்டத்தையும் ,மக்களையும், காக்கின்ற பணி தொடரட்டும் ' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.