சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா என ரசிகர்கள் கொண்டாடும் வகையிலான என்டர்ட்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு(2021) சிலம்பரசன் நடித்து வெளிவந்த மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க கடைசியாக இந்த ஆண்டில் (2022) அசோக்செல்வன் நடித்து வெளிவந்த மன்மதலீலை திரைப்படமும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது திரைப்பயணத்தில் 11வது திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் VP11 திரைப்படத்தை சமீபத்தில் தொடங்கினார். இத்திரைப்படத்தில் தனது 22வது திரைப்படமாக (NC22) பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் NC22 படத்தில், பிரபல இளம் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, அரவிந்த் சுவாமி, ப்ரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வென்னெலா கிஷோர், ப்ரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் SR.கதிர் ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்கிறார்.

NC22 படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கின்றனர். சமீபத்தில் தொடங்கப்பட்ட NC22 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், மைசூரில் நடைபெற்று வந்த படத்தின் மிக முக்கிய பகுதிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

And it's wrap for #NC22 Major Schedule in Mysore 🔥

Our team completed filming in the beautiful locales of Mysore ❤️‍🔥@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @SS_Screens @srkathiir @rajeevan69 @abburiravi #VP11 pic.twitter.com/TPiF86TsNM

— Srinivasaa Silver Screen (@SS_Screens) October 21, 2022