தமிழ் சினிமாவின் இன்றியமையாத உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் தளபதி விஜய் தனது மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் திரைப்படம் தளபதி67. விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விரைவில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு வரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  சமீபகாலமாக பலமுறை தெரிவித்துவரும் நிலையில், அந்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல் வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாகும் என சமீபத்தில் இசையமைப்பாளர் S.தமன் தெரிவித்து ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு(2023) ஜனவரியில் பொங்கல் வெளியீடாக வாரிசு திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாரிசு திரைப்படத்தின் ஐரோப்பிய ரிலீஸ் உரிமையை 4Seasons Creations AS நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

We are very much happy to announce that #Thalapathy @actorvijay na #Varisu & #Varasudu Europe Release by @4SeasonsCreati1

Get ready Nanba’s#VarisuPongal @iamRashmika @directorvamshi @SVC_official @MusicThaman @VijayFansFR @VijayTrendsPage @theactorvijay @VijayFansPage pic.twitter.com/BY7HbLelR6

— 4Seasons Creations AS (@4SeasonsCreati1) October 21, 2022