தமிழ் திரையுலகின் பழம்பெரும் சிறந்த எழுத்தாளரும் இயக்குனருமான சித்ராலயா கோபு அவர்களின் அசத்தலான திரைப்படங்களில் ஒன்று காசேதான் கடவுளடா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரிப்பில் தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நகைச்சுவைத் திரைப்படமாக 1970-களில் வெளியாகி மெகா ஹிட்டான காசேதான் கடவுளடா நகைச்சுவை திரைப்படம் தற்போது ரீமேக் ஆகிறது .

பிரபல தமிழ் இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகும் காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தை தயாரிப்பாளர் M.K.ராம் பிரசாத் அவர்களின் MKRP புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ்  இணைந்து தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, N.கண்ணன் இசையமைத்துள்ளார்.

காசேதான் கடவுளடா ரீமேக் திரைப்படத்தில் நடிகர் சிவா மற்றும் நடிகர் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகைகள் ஊர்வசி , ப்ரியா ஆனந்த் ,கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா ஆகியோருடன் இணைந்து விஜய் டிவியின் குக்கு வித்து கோமாளி புகழ் & சிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகச் சரியாக திட்டமிடப்பட்டு அனைவரின் ஒத்துழைப்போடு கிட்டத்தட்ட வெறும் 35 நாட்களுக்குள் முழு படப்பிடிப்பையும் ஒரே கட்ட படப்பிடிப்பாக நிறைவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் காசேதான் கடவுளடா திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை உலக அளவில் முன்னணி தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாக திகழும் சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காசேதான் கடவுளடா படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.