பிரபல நடிகருடன் கூட்டணி அமைத்த வாரிசு பட தயாரிப்பாளர்.. - ரசிகர்கள் கொண்டாட்டம்.. அட்டகாசமான அப்டேட் இதோ..

வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படம் குறித்த அப்டேட் - Dil raju next project with vijay devarakonda | Galatta

இந்த ஆண்டு துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆடிய இப்படம் வம்சி இயக்கத்தில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்தார். மேலும் விஜய் நடிப்பில் குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி வெளியான வாரிசு திரைப்படத்தினை குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ரசித்தனர். படம் வெளியாகி 25 நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் 250 கோடிக்கு மேல் வசூலித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தனது அடுத்தப்பட வேலையை துவங்கியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தெலுங்கு திரையுலகில் பிரபலபலான முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவன தயாரிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.  குறிப்பாக ‘தில்’, பிருந்தாவனம்,’F2’, மகரிஷி, ‘சரிலேறு நீக்ககெவரு’ மற்றும் கடைசியாக இவர்கள் தயாரிப்பில் வெளியிட்ட வாரிசு திரைப்படமும் உலகளவில் வசூலை குவித்து மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லை சேர்த்துள்ளது.மேலும் இயக்குனர் சங்கர், நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும்  பான் இந்தியா திரைப்படமான ‘SVC50’ திரைப்படத்தையும் தயாரித்து வருகின்றனர். இது இவர்களுடைய ஐம்பதாவது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிப்பில் தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் பரசுராம். இவர் முன்னதாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ என்ற சூப்பர் ஹிட் திரைப்படம் கொடுத்தவர். தற்போது மீண்டும் விஜய்தேவரகொண்டா வுடன் இணைந்தது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள், நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

biggboss fame actor kavin upcoming movie dada trailer and song out now

Very happy to announce that we are collaborating with blockbuster combination of The #VijayDeverakonda @TheDeverakonda & @ParasuramPetla for our upcoming film. 💥💥💥

Stay tuned for more updates... pic.twitter.com/WQfyhPFXS5

— Sri Venkateswara Creations (@SVC_official) February 5, 2023

விஜய் தேவரகொண்டா நடிப்பில் முன்னதாக லைகர் திரைப்படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கொண்டு வெளியான அப்படம் ரசிகர்களிடம் கலவையான விமரசனத்தையே பெற்றது, அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா , சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் அந்த திரைப்படம் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் விஜய் தேவர்கொண்டா குஷி திரைப்படத்திலும் இயக்குனர் பரசுராம் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இச்செய்தியையடுத்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் வெளியிட்ட பட அறிவிப்பு குறித்த செய்தியை  ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். 

சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு விபத்து.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்
சினிமா

சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு விபத்து.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..
சினிமா

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..
சினிமா

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..