அட்டகாசமான நடிப்பில் கவின்.. வெளியானது டாடா படத்தின் டிரைலர் - ரசிகர்களால் வைரலாகி வரும் டிரைலர் & பாடல் இதோ..

கவினின் டாடா படத்தின் டிரைலர் வெளியானது - Fans celebrate Kavin Dada movie trailer | Galatta

பிக்பாஸ் தமிழ் தொலைகாட்சி மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் கவின். சின்னத்திரை நடிகராக அறிமிகமாகி தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.  கதாநாயகனாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘நட்புனா என்னனு தெரியுமா’ திரைப்படம் இவருக்கு சரியாக கை கொடுக்காமல் போனாலும் அவருடைய விடா முயற்சியினால் அடுத்த படமான 'லிஃப்ட்'  மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் தொடர்ந்து ‘ஆகாஷ் – வாணி’ இணையதொடரிலும் நடித்தார். தற்போது கவின் ‘ஊர் குருவி’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே கவின் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் ‘டாடா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 10 ம் தேதி திரைக்கு வரவிருக்கின்றனர்.

குழந்தைக்கு தந்தையாக நடிக்கும் கவினின் டாடா படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்று டாடா படத்திற்கு தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ், அபர்ணா தாஸ், ஹரிஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்,

இந்நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை போரம் விஜயா மாலில் நடைபெற்றது இதில் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் நடிகர்களான கவின், அபர்ணா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் முன்னிலையில் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது.  கம்ளீட் கமர்ஷியல் எலிமண்டுகளை சேர்த்து ரசிக்கும்படியே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. நகைச்சுவையுடன் காதலும் அதில் வரும் சிக்கல்களையும் பேசியிருக்கும் டாடா படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Trailer of #Dada is here :)
Worldwide release on FEB 10!

▶️ https://t.co/WPgJe5mPFk pic.twitter.com/KTGeFmUAnB

— Kavin (@Kavin_m_0431) February 5, 2023

பத்து பாடல்கள் கொண்ட தொகுப்பாக படத்தின் ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் ‘போகாதே’ என்ற பாடல் ஜென் மார்டின் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் தாயாக நான், டாடா சாங், கிருட்டு கிருட்டு, NTF,கிளேச காதலா, தாயக நான் reprise, எப்புட்றா theme இதனுடன் இரண்டு சவுண்ட் டிராக்குகளும் உள்ளது. ஏற்கனவே வெளியான சில பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகி உள்ள பாடல்களும் கேட்கும் படியும் ரசிக்கும் படியும் உள்ளது.

Presenting you all the complete album of #Dada :) @JenMartinmusic ♥️🤗😘@thinkmusicindia 💥

Trailer will be out today @ 6pm.
See you all at nexus vijaya mall today @ 5pm.#DadaFromFeb10th

https://t.co/tFZ2YhFgRN

— Kavin (@Kavin_m_0431) February 5, 2023

இதனையடுத்து பாடல் ரசிகர்களை வெகுவாக டிரைலர் கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  கவின் நடிப்பில் நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக உருவாகியுள்ள டாடா படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தமிழகமெங்கும் வெளியிடவிருக்கின்றன. நிச்சயம் இந்த படம் கவின் திரைப்பயணத்தில் ஒரு வெற்றி படமாக அமையும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..
சினிமா

எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..
சினிமா

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட
சினிமா

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட