'Gangstaa 2.0' துணிவு படத்தின் வெளிவராத பாடல்.. - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பிரபலம்.. வைரலாகி வரும் Special Video இதோ..

அஜித் ரசிகர்கள் கொண்டாடும் துணிவு படத்தின் வெளிவராத பாடல் - Fans Celebrate Thunivu Gangstaa song another version | Galatta

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகப்பெரிய திரைப்படமாக மக்கள் ஆரவாரத்துடன் வெளியானது. பொங்கல் நாளையொட்டி ஜனவரி 11 ம் தேதி உலகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியாகி இன்று வரை ரசிகர்கர்களின் கொண்டாட்டங்களுடன் பல திரையரங்குகளில் ஓடிக் கொடிருக்கின்றது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியார், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் 50 வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில்  பாடல்கள் பின்னணி இசை முன்னதாக வெளியாகி பட்டி தொட்டி எங்கிலும் ஹிட் அடித்தது.

இந்நிலையில் படத்தில் அமைந்துள்ள ‘கேங்க்ஸ்டா’ பாடலின் மற்றொரு VERSION ஐ கேங்க்ஸ்டா பாடலை பாடியவரும் எழுதியவருமான ஷபீர் சுல்தான் வெளியிட்டுள்ளார். முன்னதாக அப்பாடலின் மாற்று வரிகளை மட்டும் பதிவேற்றிய அவர் அதற்கு அஜித் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது ஷபீர் அந்த வரிகளுக்கு குரல் கொடுத்து இசை சேர்த்து வெளியிட்டுள்ளார். படத்தில் இடம் பெறாத இந்த பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து ஷபீர் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதில், “அன்பான அஜித் ரசிகர்களே..இதோ உங்களுக்காக கேங்க்ஸ்டா பாடலின் ALTERNATIVE VERSION. இதன் மூலம் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் அந்த பாடலை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.  

Dear AK fam,

This alternate cover version is my way of saying thank you for your tremendous love and support for #Gangstaa. 🫶🏾

Peace,

𝕾𝖍𝖆𝖇𝖎𝖗 𝕾𝖚𝖑𝖙𝖍𝖆𝖓

Song Link 👇🏾https://t.co/VcGvMI5Pf8#ShabirSulthan #NGRKVi #Thunivu #Ajithkumar𓃵 #ThunivuSoundtrack

— Shabir Sulthan (@ShabirMusic) February 5, 2023

முன்னதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்திற்காக 10க்கு மேற்பட்ட பயன்படுத்தாத பின்னணி இசை உள்ளது என்ற பதிவு போல் இந்த பதிவும் ஒலி வடிவில் கேட்கவேண்டும் என்று படக்குழுவினரை கேட்டுக்கொண்டு வருகின்றனர். திரையில் வெற்றிநடைபோட்டிருந்த துணிவு திரைப்படம் வரும் பிப் 8 ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் ஒளிபரப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..
சினிமா

“எண்ணம் போல் தான் வாழ்க்கை” வாத்தி மேடையில் மாஸ் காட்டிய தனுஷ்.. - சுவாரஸ்யமான வைரல் பேச்சு இதோ..

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட
சினிமா

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம்  - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..
சினிமா

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம் - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..