சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு விபத்து.. – அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கராவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது - Soorarai Pottru Director Sudha kongara injured | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. 2010 ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் வைத்து துரோகி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து சுதா பின் நீண்ட இடைவெளிக்கு பின் மாதவன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோரை வைத்து ‘இறுதிச் சுற்று’ என்ற திரைப்படத்தை இயக்கினார். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் மாதவன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குனர் சுதா.அதன் பின் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கினார் சுதா. மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் ஒடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிறந்த திரைப்படம்,சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த நடிகர், நடிகை  ஆகிய பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளையும் இப்படம் குவித்தது. அதன் பின்னர் பாவகதைகள் என்ற இணைய தொடரில் ‘தங்கம் என்ற குறும்படத்தையும் ‘புத்தம் புது காலை’ தொடரில் ‘இளமை இதோ இதோ என்ற குறும்படத்தையும் கொடுத்து பாராட்டுகளை பெற்றார் சுதா. தற்போது இயக்குனர் சுதா கொங்கரா சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை அக்ஷய் குமார் வைத்து சூர்யா தயாரிப்பில் எடுத்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலை மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில்  இயக்குனர் சுதா கொங்கராவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் சுதா கொங்கரா தனது சமூக ட்விட்டர் பக்கத்தில் முறிந்த கைக்கு சிகிச்சை செய்யப்பட்ட பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.

surprise coincidence for thalapathy vijay and trisha in lokesh kanagaraj leo movieஅதனுடன் “சிறந்த வலி. சிறந்த எரிச்சலூட்டும்! ஒரு மாத இடைவெளியில்! இது நான் விரும்பிய இடைவேளை அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

Super painful. Super annoying! On a break for a month 😒 #NotTheKindOfBreakIWanted pic.twitter.com/AHVR4Nfumf

— Sudha Kongara (@Sudha_Kongara) February 5, 2023

இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இப்பதிவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் “விரைவில் குணமடையுங்கள் சகோதரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get well soon dear sister

— G.V.Prakash Kumar (@gvprakash) February 5, 2023

மேலும் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வருத்தங்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது சுதா பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அடிபட்ட காரணத்தினால் படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட
சினிமா

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வீட்டில் திருமண விழா.. எளிமையான கொண்டாட்டம்.. - மகிழ்ச்சியில் கல்யாணி பிரியதர்ஷன்.. வைரலாகும் புகைப்பட

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம்  - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..
சினிமா

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம் - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..

விஸ்வரூப வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. Stylish Look ல் கமல் ஹாசன் - உற்சாகத்தில்  ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விஸ்வரூப வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. Stylish Look ல் கமல் ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..