தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட மாஸான ப்ளடி ஸ்வீட் பாடல் உருவான விதம்... வேற லெவல் வைரலாகும் GLIMPSE இதோ!

தளபதி விஜயின் லியோ பட ப்ளடி ஸ்வீட் பாடல் மேக்கிங் வீடியோ,thalapathy vijay lokesh kanagaraj in leo movie bloody sweet song making video | Galatta

வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு தளபதி 67 படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்ததன் படி தளபதி விஜயின் மாஸான ப்ரோமோவோடு தளபதி 67 படமான லியோ திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதர அறிவிப்புகள் மீண்டும் சில நாட்களுக்குப் பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக இணைகிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கும் லியோ திரைப்படத்திற்கு, சதீஷ்குமாரின் கலை இயக்கத்தில், தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக  பணியாற்றுகின்றனர்.

முன்னதாக லியோ திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்ற BLOODY SWEET பாடல் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த BLOODY SWEET பாடலில் பணியாற்றிய மேக்கிங் வீடியோவை முன்னணி கிட்டார் இசைக்கலைஞர் கேபா அவர்கள் வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து கேபா பணியாற்றும் அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Keba Jeremiah (@kebajer)

சமூகத்தில் பாலினம் வைத்து அறிமுகப்படுத்தக் கூடாது... பிக்பாஸ் ஷிவின் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதான்! விவரம் உள்ளே
சினிமா

சமூகத்தில் பாலினம் வைத்து அறிமுகப்படுத்தக் கூடாது... பிக்பாஸ் ஷிவின் எதிர்பார்க்கும் மாற்றம் இதுதான்! விவரம் உள்ளே

என் அம்மாவா இப்படி பேசுறது..? பிக் பாஸுக்கு பின் தனது தாயின் வரவேற்பிலும் அன்பிலும் மகிழ்ந்த ஷிவின்! வைரல் வீடியோ
சினிமா

என் அம்மாவா இப்படி பேசுறது..? பிக் பாஸுக்கு பின் தனது தாயின் வரவேற்பிலும் அன்பிலும் மகிழ்ந்த ஷிவின்! வைரல் வீடியோ

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!