எப்புட்றா... 'லியோ' திரைப்படத்தில் விஜய், திரிஷா கூட்டணியில் இப்படி ஒரு ஒற்றுமையா? - உற்சாகத்தில் ரசிகர்கள்.. இணையத்தில் வைரலான பதிவு..

லியோ படத்தில் விஜய் திரிஷா ஜோடி கூட்டணியில் அதிசயமான ஒற்றுமை - Beautiful coincidence for vijay and trisha in leo | Galatta

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் டைட்டில் வெளியீடு பிரத்யேக வீடியோவுடன் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் உருவாக்கி வரும் லியோ படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையில் பிலடி ஸ்வீட்’ என்கிற பாடல் தற்போது டிரென்ட்டிங்கில் உள்ளது. இப்படத்திற்கு  மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக வெளிவரவிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி. கன்னடா உள்ளிட்ட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் விஜயுடன் இணைந்து 14 வருடம் கழித்து திரிஷா நடிக்கவுள்ளார். இந்த செய்தி விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

தமிழ் சினிமாவில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்த ஜோடி என்று பெயர் வாங்கியவர் விஜய் திரிஷா ஜோடி. இவர்கள் 14 வருடம் கழித்து மீண்டும் திரையில் ஒன்றாக தொடர இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விஜய் திரிஷா ஒன்றாக இணைந்து நடிக்க போகும் ஐந்தவாது திரைப்படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கில்லி’. திருப்பாச்சி, ஆதி, குருவி’ படங்களில் நடித்தனர்.  இந்த கூட்டணியே சிறப்பு வாய்ந்ததாக ரசிகர்களுக்கு இருக்கும் நிலையில் இந்த சிறப்பு கூட்டணியில் மேலும் சுவாரஸ்யம் சேர்க்கும் விதத்தில் இன்னொரு விஷயமும் அமைந்துள்ளது. விஜய் திரைப்பயணத்தில் லியோ திரைப்படம் 67 வது திரைப்படம். அதே போல் திரிஷா திரைப்பயணத்திலும் இந்த படம் 67 வது திரைப்படமாக அமைந்துள்ளது. இது தற்செயலாக நடைபெற்றதா அல்லது திட்டமிடப்பட்டு இந்த கூட்டணி படத்தில் வைக்கப்பட்டதா என்று ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Lovely coincidence ❤️@actorvijay @trishtrashers #Leo #Thalapathy67 #ThalapathyVijay #Trisha @Dir_Lokesh @Jagadishbliss @7screenstudio @MrRathna #LokeshKanagaraj #Galatta pic.twitter.com/xV3KHfN5NI

— Galatta Media (@galattadotcom) February 4, 2023

திரிஷா திரைத்துறைக்கு வந்து 20 வருடம் முடிந்து விட்ட நிலையில் இந்த 67 வது திரைப்படம் அவருக்கு வெற்றி திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.  லியோ திரைப்படத்தில் விஜய் திரிஷா வுடன் இணைந்து சஞ்சய் தத், ஆக்ஷன்கிங் அர்ஜுன், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேத்திவ் தாமஸ் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஒடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் தொலைகாட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளது.

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம்  - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..
சினிமா

அசத்தலான பாடலை அள்ளித்தந்த ‘வாத்தி’ திரைப்படம் - Vibe ல் தனுஷ் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல்கள் இதோ..

விஸ்வரூப வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. Stylish Look ல் கமல் ஹாசன் - உற்சாகத்தில்  ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..
சினிமா

விஸ்வரூப வேகத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. Stylish Look ல் கமல் ஹாசன் - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரல் பதிவு இதோ..

“இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் இங்கே..” Surprise ஆக வெளியான Soul of Varisu - உற்சாகத்தில் ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ சாங் இதோ..
சினிமா

“இழந்த சிரிப்பும் இதய துடிப்பும் இங்கே..” Surprise ஆக வெளியான Soul of Varisu - உற்சாகத்தில் ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ சாங் இதோ..