‘இந்த combo புதுசா இருக்கே..’ - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகர் - Redin Kigsley will act keerthy suresh upcoming film revolver rita | Galatta

மாநாடு, தமிழ்படம் 1,2 ஆகிய படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய இயக்குனர் சந்துரு அவர்கள் இயக்குனராக தனது இரண்டாவது படமான 'ரிவால்வர் ரீட்டா ' திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார். கிரைம் திரில்லர், பேய் படங்கள், ஆக்ஷன் அல்லது சமூதாய கருத்துக்கள் கொண்ட சீரியஸ் படங்களே வழக்கமான ஹீனோயின் சென்ட்ரிக் படமாக இருந்து வரும் நிலையில் ரிவால்வர் ரீட்டா படத்தை முழுக்க முழுக்க நகர பின்னணி கொண்ட டார்க் காமெடி மூலம் உருவாக்கவுள்ளார் இயக்குனர் சந்துரு. இவர் முன்னதாக நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்தை இயக்கி மக்களை வெகுவாக கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு  வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கும் நிலையில் படத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது படக்குழு. ரெட்ரோ லுக்கில் கீர்த்தி சுரேஷ் ன் முதல் பார்வையை வெளியிட்டதையடுத்து ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றது ரிவால்வர் ரீட்டா. சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் பி ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். மேலும்  இப்படத்தில் மைம் கோபி, சென்ட்ராயன் மற்றும் சூப்பர் சுப்புராயன் ஆகியோர் படத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரெடின் கிங்க்ஸ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

pic.twitter.com/t93lktKb3s

— Reddin Kingsley (@KingsleyReddin) January 17, 2023

ரெடின் கிங்க்ஸ்லி கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட மிக முக்கியமான திரைப்படங்களில் காமெடியாக நடித்தவர். இவரது வித்யாசமான முகபாவனை மற்றும் கவுண்டர்களுக்கே தனியான ரசிகர் பட்டாளம் சமீபத்தில் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின்  டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றியுள்ளது பிரபல ஒடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம்.

கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். ஒரு புறம் முன்னணி கதாநாயகனுடன் நடித்து வந்தாலும் அதே நேரத்தில் தனியாக கதாநாயகி மையப்படுத்திய கதைகளையும் ஏற்று நடித்து வருகிறார். இவர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'மாமன்னன்' , நடிகர் நானி நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி வரும் ‘தசரா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ –   ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.
சினிமா ஸ்பெஷல்ஸ்

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ – ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ – அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் இந்தி ரீமேக்.. ராஜமௌலி Reference..
சினிமா

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ – அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் இந்தி ரீமேக்.. ராஜமௌலி Reference..

“லவ் டுடே படம் இதனால் தான் வெற்றி பெற்றது
சினிமா

“லவ் டுடே படம் இதனால் தான் வெற்றி பெற்றது" – எச் வினோத்தின் தெளிவான பதில்... வைரலாகும் வீடியோ