அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ – அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் இந்தி ரீமேக்.. ராஜமௌலி Reference..

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ இந்தி ரீமேக் டிரலைர் வெளியீடு - Allu arjun Ala Vaikunthapurramuloo hindi remake trailer released | Galatta

தெலுங்கில் அட்டகாசமான சண்டை காட்சிகளுடன் 2020 ம் ஆண்டில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியாகிய மெகா ஹிட் திரைப்படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. குடும்ப கதையை மையப்படுத்தி உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர், அந்த ஆண்டு வெளிவந்த படங்களில் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றி படமாக அப்படம் இருந்தது. வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காட்சிகள், திரையை அதிர வைத்த சண்டை காட்சிகள், கனமான குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக்கபட்ட இப்படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ‘வைகுண்டபுரம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல வசூலையும் தமிழில் பெற்றது. உணர்வுகளை சரியாக கையாண்டதில் வெகுஜன மக்களிடம் ஒரு ரவுண்டு அடித்து வெற்றி பெற்றது. படத்தின் இறுதி காட்சி இதுவாக தான் இருக்கும் என்று எண்ணிய அனைவருக்கும் புது விதமான  டச் கொடுத்து  சற்று வித்யாசமான பார்வையை கொடுத்திருப்பார் இயக்குனர். அசத்தலான நடிப்பில் மிகவும் கூலான தோரணையில் அல்லு அர்ஜுன் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. பூஜா ஹெக்தே, நிவேதா பெத்துராஜ், ஜெயராம், தபு என்று பெரும் நட்சத்திர கூட்டத்துடன் உருவான இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்தார். தமன் இசையில் அனைத்து பாடல்களும் வரவேற்பு பெற்றது குறிப்பாக ‘புட்ட பொம்மா’ பாடலும் அந்த பாடல் நடனமும் உலகளவில் வைரலானது.

கிட்டதட்ட உண்மையிலே குடும்பங்கள் கொண்டாடும் படமாக அலா வைகுந்தவைகுந்தபுரமுலூ படம் இருந்தது. இந்த படத்தின் வெற்றி அனைத்து மொழி திரையுலகையும் கவனிக்க வைத்தது. உணர்வுகளை எந்த மொழியில் ரெமேக் செய்தாலும் ஓடும் என்று எண்ணி பல மொழிகளில் இந்த படத்தை ரெமேக் செய்ய முன்  வந்தனர், அதன் படி அதிகாரப்பூர்வமாக வைகுந்தபுரம்லோ படம் இந்தியில் ரெமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

‘ஷெஹ்சாதா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தில் கார்த்திக் ஆர்யன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கிருதி சனொன், மனிஷா கொய்ராலா,பரேஷ் ராவல் உள்ளிட்டோர் நட்சத்திர பட்டியலில் உள்ளனர். அல்லு புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தினை இயக்குனர் ரோஹித் தவான் இயக்குகிறார். வரும் பிப்ரவரி மாதம் வெளிவரவிருக்கின்ற  ஷெஹ்சாதா படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது. ராஜமௌலி ரெபரென்ஸ் உடன் வெளிவந்துள்ள டிரைலர் ரசிகர்களிடம் வெகுவாக கவரப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் இணையத்தில் கார்த்திக் ஆரினை அல்லு அர்ஜுன் உடன் இணைத்து ஒப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

 “தோழா படத்திலும் நாங்கள் இதேதான் செய்தோம்..” – வாரிசு பட இயக்குனர் வம்சியின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..
சினிமா

“தோழா படத்திலும் நாங்கள் இதேதான் செய்தோம்..” – வாரிசு பட இயக்குனர் வம்சியின் சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக வரும் வாழை படம்... ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக வரும் வாழை படம்... ஷூட்டிங் குறித்த ருசிகர தகவல் இதோ!

அட்லீக்கு புகழாரம் சூட்டிய ஷாருக் கான் – புது பட்டம் .. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

அட்லீக்கு புகழாரம் சூட்டிய ஷாருக் கான் – புது பட்டம் .. வைரலாகும் பதிவு இதோ..