தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வாரிசு இயக்குனர் வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்! விவரம் உள்ளே

தளபதி 67 பட அறிவிப்பு குறித்து வம்சி பைடிபல்லியின் ரியாக்ஷன்,varisu director vamshi about thalapathy 67 announcement | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி 67 படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்று முன்பு (ஜனவரி 30) வெளியிட்டது. கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கப்பட்ட தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இந்தியாவை சுற்றி பல முக்கிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர்.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களில் வரிசையில் விஜயின் தளபதி 67 படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபல்லி தளபதி 67 படத்தின் அறிவிப்புகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த வகையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் தளபதி 67 பட முதல் அறிவிப்புக்கு, “வாழ்த்துக்கள் (SS.லலித் குமார்) சகோதரரே... உங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் இந்த பெரிய படைப்பில் உங்களுக்கு அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். அதேபோல், தளபதி விஜய் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜின் பதிவுக்கு. “இது மிகவும் சக்தி வாய்ந்த புகைப்படம் லோகேஷ் கனகராஜ்... நீங்கள் மற்றும் தளபதி விஜய் சார் அவர்களின் காம்பினேஷனில் அடுத்த அதிரடி படைப்பாக வரும் இதை பார்க்க காத்திருக்க முடியவில்லை. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோதரரே” என பதிவிட்டுள்ளார். இயக்குனர் வம்சியின் அந்த பதிவுகள் இதோ…
 

This is a very powerful image @Dir_Lokesh... can't wait to watch yet another stunner in this combination of @actorvijay Sir and You.... Wishing You the best of everything brother... :)#Thalapathy67 https://t.co/lLaRrJXaTI

— Vamshi Paidipally (@directorvamshi) January 30, 2023

Congratulations Brotherr....so very happy for You...Wishing You the best of everything for This BIG One... 🤗
#Thalapathy67 https://t.co/m2wSNjGzPR

— Vamshi Paidipally (@directorvamshi) January 30, 2023

சிலம்பரசன்TR-கௌதம் கார்த்திக்கின் அதிரடியான பத்து தல... முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சினிமா

சிலம்பரசன்TR-கௌதம் கார்த்திக்கின் அதிரடியான பத்து தல... முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

SSராஜமௌலியின் RRR வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

SSராஜமௌலியின் RRR வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - அதிரடி அறிவிப்பு இதோ!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!