சிலம்பரசன்TR-கௌதம் கார்த்திக்கின் அதிரடியான பத்து தல... முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிலம்பரசன்TRன் பத்து தல படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு,silambarasan tr in pathu thala movie first single announcement | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன்.TR தனது விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்த வென்று தணிந்தது காடு திரைப்படம் கடந்த ஆண்டில் (2022) வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.

இதன் தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் விரைவில் தயாராகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர். அடுத்ததாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் சிலம்பரசன்.TR நடிக்க இருக்கிறார். 

இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் பத்து தல திரைப்படத்தில், முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்துள்ளார். வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள முதல் பாடல் எப்போது ரிலீஸ் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், நாளை ஜனவரி 31-ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

You asked and we've heard you! Gear up for the #PathuThalaFirstSingle announcement arriving tomorrow @ 5.04PM! ❤‍🔥#PathuThala #Atman #SilambarasanTR #AGR #PathuThalaFromMarch30

Starring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar

An @arrahman Musical pic.twitter.com/MwZy4osgNZ

— Studio Green (@StudioGreen2) January 30, 2023

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!
சினிமா

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்... அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் - வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்... அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் - வைரலாகும் புகைப்படங்கள்!

தளபதி விஜயின் மெகா பிளாக்பஸ்டர் வாரிசு... 3வது வாரத்தில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மெகா பிளாக்பஸ்டர் வாரிசு... 3வது வாரத்தில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!