போட்றா வெடிய... ஆவலோடு காத்திருந்த விஜய்-லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட அட்டகாசமான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தளபதி 67 படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு,vijay lokesh kanagaraj in thalapathy 57 movie first official announcement | Galatta

இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் திரைப்படமான தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் தளபதி விஜய் இணைவதாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியாலும் தளபதி 67 திரைப்படத்தின் மீது மிகப்பெரிய ஆர்வம் தொடர்கிறது.

வெகு நாட்களாகவே தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு ஒவ்வொரு முறையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு நேரங்களிலும் கேட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் கொடுத்தார்.

இதனிடையே படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இன்று ஜனவரி 30 ஆம் தேதி சர்ப்ரைஸாக தளபதி 67 திரைப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

எங்களது பெருமை மிகுந்த படைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை உங்களிடம் தெரிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மிகுந்த உற்சாகம் கொள்கிறது. மாஸ்டர் & வாரிசு ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக தளபதி விஜய் சாருடன் இணைகிறோம்.

மாஸ்டர் படத்தின் படைப்பாளி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படைப்பிற்கு தற்காலிகமாக தளபதி 67 என பெயரிட்டுள்ளோம். இப்படத்தை S.S.லலித்குமார் அவர்களுடன ஜெகதீஷ் பழனிசாமி அவர்கள் இணைந்து தயாரிக்கிறார். கடந்த ஜனவரி 2ம் தேதி படப்பிடிப்பு தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைந்துள்ளனர். தொடர்ந்து மாபெரும் ஹிட் ஆல்பங்களான கத்தி, மாஸ்டர், பீஸ்ட் வரிசையில் தளபதி 67 படத்திற்கும் இசையமைக்கும் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் நான்காவது முறையாக தளபதி விஜய் உடன் இணைகிறார்.

தளபதி 67 திரைப்படத்தின் தொழில்நுட்ப (படக்)குழுவினரின் விவரங்கள் பின்வருமாறு:
ஒளிப்பதிவாளர் - மனோஜ் பரமஹம்சா
ஸ்டண்ட் இயக்குனர்கள் - அன்பறிவு
படத்தொகுப்பாளர் - பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் -  N.சதீஷ்குமார்
நடன இயக்குனர் - தினேஷ்
வசனகர்த்தாக்கள் -  லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைடி

இதர நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும். தளபதி 67 படத்திற்காக ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
அன்புடன் 
தளபதி 67 படக்குழு

என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இதோ…

 

The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥

We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️

We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97

— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!
சினிமா

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்... அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் - வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே வீட்டில் விசேஷம்... அண்ணனின் திருமணத்தில் ஆனந்த கண்ணீர் - வைரலாகும் புகைப்படங்கள்!