எஸ் ஏ சந்திரசேகர் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்

எஸ் ஏ சந்திரசேகர் விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார் | Galatta

இசையமைபாளார் விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் ஒலி பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். சிறு சிறு விளம்பர படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் இசையமைத்த விஜய் ஆண்டனியின் முதல் பெரிய படம் ‘டிஷ்யூம்’ ஆனால் திரையில் வெளிவந்த திரைப்படம் எஸ் ஏ சந்திர சேகர் இயக்கத்தில் தளபதி விஜய், ரவி கிருஷ்ணா நடித்த சுக்ரன். முதல் படத்திலே ரசிகர்களின் கவனம் பெற்ற விஜய் ஆண்டனி பின்னாளில் பல முக்கிய படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது, அவர் இசை ஒலிக்காத நாளே இல்லாத அளவு இசையில் துள்ளலனா மெட்டுகளை சேர்த்து ரசிக்க வைத்தவர் . இசையில் புகழ்பெற்ற விஜய் ஆண்டனி பின் கதாநாயகனாக திரைத்துறையில் காலடி வைத்தார், நடித்த பெரும்பாலான படங்கள் ஜனரஞ்சகமான வரவேற்பை அளித்தது குறிப்பாக பிச்சைக்காரன், சலீம், நான் போன்ற படங்கள்.

இந்நிலையில் விஜய் ஆன்டணியை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர் எஸ் எ சந்திர சேகர் அவர்களிடம் விஜய் ஆண்டனிக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து கேட்ட போது,
“என்னிடம் சொல்லும்பொழுது முகம் உடைந்துவிட்டது ரொம்ப சீரியஸ் ஆ தூக்கிட்டு போனாங்க என்றெல்லாம் சொன்னார்கள். நான் உடனே சான்ட்ராக்கு போன் செய்து என்ன என்று கேட்டேன். இல்லை லேசான காயங்கள் தான் உதடு மற்றும் பற்களில் அடிபட்டுள்ளது என்று சொன்னார்கள். சரி ஆகிவிடுவார் என்று சொன்னார்கள்.அவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை மனஉறுதி சாதரணமானது அல்ல . பயங்கரமான மன உறுதிமிக்கவர். சொல்லப்போனால் அவர் கடவுளையே நம்ப மாட்டார். அவர் அவரை மட்டுமே நம்பக்கூடியவர்.” என்று குறிப்பிட்டார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் சந்திரசேகர் தனது 70 வது படமான ‘நான் கடவுள் இல்லை’ படம் வரும் பிப்ரவரி 3 ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நமது கலாட்ட தமிழ் சிறப்பு பேட்டியில்  கலந்து கொண்டார். இதில் பேசிய முழு வீடியோ இதோ..
 

விஜய் அப்படியே வேற இடத்துக்கு போய்ட்டாரு ! பூரித்த இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர்
சினிமா

விஜய் அப்படியே வேற இடத்துக்கு போய்ட்டாரு ! பூரித்த இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர்

துணிவு மற்றும் வாரிசு ஒரே ரிலீஸ் தேதி - ஏதேனும் திட்டமா? எச்.வினோத் ஓபன் டாக்!
சினிமா

துணிவு மற்றும் வாரிசு ஒரே ரிலீஸ் தேதி - ஏதேனும் திட்டமா? எச்.வினோத் ஓபன் டாக்!

துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி
சினிமா

துணிவு குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சமுத்திரக்கனி பேட்டி