நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!

ஜோதிகாவின் ஸ்ரீ பாலிவுட் பட ஷூட்டிங் அப்டேட்,jyothika completed her part of shooting in sri bollywood movie | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் கதாநாயகியாக ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜோதிகா. முன்னதாக சூர்யாவை திருமணம் செய்த பிறகு ஆறு ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்ட ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

அடுத்தடுத்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என வரிசையாக பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ஜோதிகாவின் திரைப்பயணத்தில் 50வது படமாக நடித்த உடன்பிறப்பே திரைப்படம் கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு  நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.

இதனிடையே முதல்முறையாக மலையாள சினிமாவின் நட்சத்திர நடிகரான மம்மூட்டி அவர்களுடன் இணைந்த நடிகை ஜோதிகா மலையாளத்தில் தயாரான காதல் - தி கோர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு காதல் - தி கோர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் என்று கொடுத்த நடிகை ஜோதிகா, இயக்குனர் துஷர் இயக்கத்தில் உருவான ஸ்ரீ திரைப்படத்தில் நடித்து வந்தார். நிதி பர்மர் ஹிராநந்தினி தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்ரீ திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்து படக்குழுவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)

தளபதி விஜயின் மெகா பிளாக்பஸ்டர் வாரிசு... 3வது வாரத்தில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மெகா பிளாக்பஸ்டர் வாரிசு... 3வது வாரத்தில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் ட்ரீட்... வாரிசு படத்தின் துள்ளலான ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் இதோ!
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் ட்ரீட்... வாரிசு படத்தின் துள்ளலான ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் இதோ!

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதியில் JD &  சாருவின் நிலை என்ன..? ட்ரெண்டாகும் மாளவிகா மோகனனின் பதில் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதியில் JD &  சாருவின் நிலை என்ன..? ட்ரெண்டாகும் மாளவிகா மோகனனின் பதில் இதோ!