"டைரக்டர் ஃபோன் பண்ணி திட்டினார்!"- கையெழுத்திடும் நேரத்தில் சூப்பர் ஹிட் படத்தை கைவிட்ட வாணி போஜன்! வீடியோ உள்ளே

பேச்சுலர் படத்தை கைவிட்டது குறித்து பேசிய வாணி போஜன்,vani bhojan reveals why she missed bachelor movie | Galatta

தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு, லவ், ரேக்ளா, ஆர்யன் மற்றும் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு புதிய படம் என வரிசையாக திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே தனது திரைப்பயணத்தில் தான் தவறவிட்ட முக்கிய திரைப்படம் குறித்து நடிகை வாணி போஜன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நமது கலாட்டா தமிழ் சேனலில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை வாணி போஜன் ரசிகர்களோடு கலந்துரையாடினார். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து பேசிய வாணி போஜனிடம், "இதுபோல் வேறு என்னென்ன படங்களை தவறவிட்டிருக்கிறீர்கள்?" என கேட்டபோது, “நான் முன்னால் நிறைய திரைப்படங்களை தவற விட்டிருக்கிறேன். அப்போது எனக்கு அவ்வளவு அறிவு இல்லை சினிமாவைப் பற்றி... சமீபத்தில் ஒரு படத்தை நான் கை விட்டேன் அந்த இயக்குனருக்கும் எனக்கும் சண்டையே வந்து விட்டது. எனக்கு போன் செய்து “ஏன் என் படத்தை கைவிட்டீர்கள்” என பேசினார். ஆமாம் பேச்சுலர் திரைப்படத்தை நான் தவற விட்டேன். ஆனால் பாருங்கள் திவ்ய பாரதி நன்றாக நடித்திருந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சென்று விட்டு இந்த திரைப்படம் எனக்கான படமாக இருக்குமா என தெரியவில்லை என்று பேனாவை வைத்துவிட்டு வந்தேன். அந்த இயக்குனர் என்னுடைய நல்ல நண்பர். அவர் இப்போது என்னை போன் செய்து திட்டினார். “நீங்கள் ஏன் என்னுடைய சுப்புவாக இல்லை” என்றார். ஆமாம் பேச்சுலர் படத்தை தவற விட்டேன்.” என்று பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம், “எதனால் இந்த ஒரு தயக்கம், இப்போது அரசியல் சார்ந்த ஒரு வெப் சீரிஸ் நடிக்கும் போதும் சொன்னீர்கள் இது எனக்கான வெப்சீரிஸாக (செங்களம்) இருக்குமா என்றீர்கள்..? என கேட்டபோது, “கட்டாயமாக எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கதைக்களத்தில் நடிக்க வேண்டும் கெத்தான கதாபாத்திரம் பண்ண வேண்டும் என எனக்கு ஒரு ஆசை. ரசிகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறேன். பாராட்டுக்களும் கிடைத்திருக்கிறது, நீங்கள் இப்படி இருப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை என்பது போல... நேற்று ஒரு அரசியல்வாதி எனக்கு போன் செய்து மிகவும் கெத்தாக இருந்தது என்றார். இந்த அளவிற்கு இது ஒரு வலுவான கதாபாத்திரம். பேச்சுலர் படத்தைப் பொறுத்த வரைக்கும் கண்டிப்பாக அது ஒரு நல்ல திரைப்படம். எனக்கு சரியாக இருக்குமா? என்னை பார்க்கும் ரசிகர்கள் என்னடா என நினைத்து விடுவார்களா? என்ற ஒரு பயம் இருந்தது. குறிப்பாக அந்த நெருக்கமான காட்சிகள்... அந்த நெருக்கமான காட்சிகள் இருக்கிறது என்பது எனக்கு கடைசியில் தான் தெரியவந்தது. நான் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு இதெல்லாம் பண்ண மாட்டேன் என சொல்லி ஒரு கலைஞரின் வேலையை நிறுத்துவதற்கு பதிலாக, அந்த படத்தில் நான் இல்லாமல் இருந்தால் வேறு ஒருவர் என்னும் நன்றாக செய்திருப்பார். திவ்யா இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எல்லோருமே கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார்கள், அவரும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். அவருக்கும் இது ஒரு பெரிய படம். நான் அந்தப் படத்தை பண்ணவில்லை என்பதை விட திவ்யா அந்த படத்தில் நடித்து தற்போது அவர் தொடர்ச்சியாக நிறைய படங்களில் நடிக்கிறார் என்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.” என தெரிவித்த வாணி போஜனிடம், “படத்தை பார்த்த பிறகு இந்த படத்தை தவற விட்டோமே என நினைத்தீர்களா?” எனக் கேட்டபோது, இயக்குனர் போன் செய்து நம்மீது இவ்வளவு நம்பிக்கையாக பேசிய போது, அந்த அடியே பாட்டை கேட்டபோது நமக்காக ஏதாவது மாற்றி இருப்பாரோ என்ற ஒரு எண்ணம் இருந்தது” என தெரிவித்துள்ளார். நடிகை வாணி போஜனின் முழு பேட்டி இதோ…
 

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ
சினிமா

“இன்னும் அந்த ஸ்டைல் படங்களில் இருக்கிறது!”- சூரி போல் நடந்து காட்டிய அவரது பள்ளிக்கூட வாத்தியார்! கலகலப்பான வீடியோ இதோ

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ
சினிமா

'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ

சினிமா

"சிவகார்த்திகேயனோடு படம் பண்றீங்களா..?"- ரகசியத்தை பகிர்ந்த ARமுருகதாஸ்!-  வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!