'இதுதான் என் கனவு படம்!'-  ஆச்சரியப்படுத்தும் அட்டகாசமான படத்தின் ருசிகர தகவல்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! வைரல் வீடியோ இதோ

தனது கனவு படம் குறித்து மனம் திறந்த ஏ ஆர் முருகதாஸ்,a r murugadoss shared about his dream project | Galatta

அஜித் குமார் அவர்களின் தீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என தொடர்ந்து பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து இந்திய அளவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த ஸ்பைடர் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிலான மிகப்பெரிய வெற்றியைப் பெற தவறின. இதனிடையே தயாரிப்பாளராக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16ஆகஸ்ட் 1947 திரைப்படம் வருகிற ஏப்ரல் 7ம் தேதி உலகெங்கும் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடன் நேர்காணலில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தனது கனவு திரைப்படம் குறித்த ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக அவரிடம் பேசியபோது, “உதாரணத்திற்கு இயக்குனர் ஷங்கர் அவர்களை எடுத்துக் கொள்வோம், அவர் சொல்லியிருந்தார் அவர் ஆரம்பத்தில் ஒரு கதை வைத்திருந்தார் அதை எடுக்க வேண்டும் என மிகவும் ஆசை.. இப்போது பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் ஷங்கர் ஆனதனால், அவர் அந்த கதையை இப்போது எடுக்கவே முடியாது. ஏனென்றால் ரசிகர்களுக்கு ஷங்கர் என்றாலே ஒரு பிரம்மாண்டம் என்கிற ஒரு பெயர் வந்துவிட்டது. அந்த மாதிரி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கு புதுமுகங்களை வைத்து ஒரு சின்ன பட்ஜெட் படம் பண்ண வேண்டும் என்று இருந்தால் அது சரியாக வருமா?" எனக் கேட்ட போது?,

“நான் தீனாவிற்கு முன்னாடி நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி சாரிடம் ஒரு கதை சொன்னேன் தீனா கதையை சொன்னேன். அப்போது அவர் “நான் சிட்டிசன் படத்தை தொடங்கி விட்டேன். அஜித் சாரை தவிர வேறு யாரையும் வைத்து படம் பண்ண மாட்டேன்.” என்று சொன்னார். அப்போது நான் அவரிடம் கேட்டேன் என்ன சார் நீங்கள் தேவர் பிலிம்ஸ் மாதிரி எம்ஜிஆரை வைத்து மட்டும்தான் படம் எடுப்பேன் என சொல்வது போல, சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது,” ஆமாப்பா அவர்கள் எம் ஜி ஆர்-ஐ வைத்து பண்ணுவார்கள் இல்லையென்றால் ஆடு மாடு கோழி வைத்து பண்ணுவார்கள். நான் அப்படி தான் பண்ணுவேன். அப்படி ஏதாவது கொண்டு வா” என்றார். உடனே அவரிடம் சொன்னேன் சார் ஒரு குரங்கு ஹீரோவாக வைத்த ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டேன். உடனே அவர் “யோசித்து விட்டு கொண்டு வந்து சொல்” என்றார். நான் தயார் செய்து விட்டு வந்து அவரிடம் சொன்னேன் சொன்னவுடன் ஓகே சொல்லிவிட்டார்.” என தெரிவித்தார் AR.முருகதாஸ்.

தொடர்ந்து அவரிடம் கிங்காங் மாதிரியான படமா? என கேட்டபோது, “இல்லை இல்லை நம்ம ஊரில் இருக்கும் சாதாரண குரங்கு தான் ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கும் வகையில் அந்த கதை அமைந்தது. அவர் சொல்ல சொன்னவர்கள் எல்லாரிடமும் அந்த கதையை சொன்னேன் எல்லாருக்கும் பிடித்து போனது. ஆனால் இறங்கி பண்ணும்போது தான் ப்ளூ கிராஸ் உடைய கட்டுப்பாடுகள் எல்லாம் மிக பயங்கரமாக இருந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது விலங்குகளை வைத்து வித்தை காட்டுவது என்பது முழுவதுமாக காணாமல் போய்விட்டது. சர்க்கஸில் கூட எந்த விலங்குகளும் கிடையாது என்பது தெரிய வந்தது. இதற்காக ஒவ்வொரு ஊராகச் சென்று ஒவ்வொரு சர்க்கஸிலும் தேடிப் பார்த்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு தீனா திரைப்படம் ஓகே ஆகிவிட்டது. உடனே அந்தப் படத்திற்கான வேலையில் இறங்கி விட்டேன். அப்போது இருந்து இந்த படத்தை செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என தயார் செய்து கொண்டே இருந்தேன். அப்போது டபுள் நெகட்டீவ் கம்பெனி என இந்த அவெஞ்சர்ஸ் படத்திற்கு எல்லாம் தொடர்ந்து ஏழு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஒரு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் நிறுவனத்திடம் இதை அனுப்பினேன். அவர்கள் பார்த்துவிட்டு அருமையாக இருக்கிறது பண்ணலாம் என்றார்கள். ஒரு இரண்டு ஆண்டுகள் அதற்கான வேலைகள் நடந்தன. கொரோனா காலகட்டத்தில் விஜய் சார் உடைய படம் கைவிட்டவுடன் அதில் தான் கவனம் செலுத்தினேன். எல்லாம் தயார் செய்து அங்குள்ள ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களோடு கலந்து பேசி ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருந்த, சமயத்தில் இந்தி திரையுலகத்தில் எல்லாம் கீழே விழுந்தவுடன் அந்த நிறுவனம் அப்படியே நிறுத்தி விட்டார்கள். ப்ரீ ப்ரோடுக்ஷன் பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தன ஆனால் எனக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் நடிகர்களை உறுதிப்படுத்த வேண்டும் மற்ற விஷயங்களை செய்ய வேண்டும் எனக்கு அதில் தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே ஒரு வருடம் விஜய் சார் படத்திற்காகவும் அதன் பிறகு இரண்டு வருடம் இந்த படத்திற்காகவும் என சென்றதால் இதற்கு மேல் நான் காத்திருக்க முடியாது என்று இருக்கிறேன். ஆனால் அந்த பணிகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நிற்கவில்லை அப்படியே நகர்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தீனா திரைப்படத்திற்கு முன் தொடங்கப்பட்ட ஒரு திரைப்படம் வேறு மாதிரி வேற மாதிரி வளர்ந்து தற்போது முழுவதுமாக கிராஃபிக்ஸில் உருவாக்குவது மாதிரி தயார் செய்யப்பட்டு எல்லாமே காண்பித்தார்கள் ரொம்ப பயங்கரமாக இருந்தது. ஹீரோவிற்கு ஒரு 20 நிமிடம் தான் இருக்கிறது. அதை நடிகர் அக்ஷய் குமார் சம்பளம் இல்லாமல் ரிலீசுக்கு பிறகு லாபத்தில் இருந்து பங்கு எடுத்துக் கொள்வதாக பேசிக் கொண்டார். அந்த சமயத்தில் ஹிந்தி திரை உலகம் கொஞ்சம் அடி வாங்கியதால் அதை கொஞ்சம் நிறுத்தி அந்தப் பணியை கொஞ்சம் மெதுவாக நடத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு படம் செய்துவிட்டு திரும்பவும் போய் பண்ணலாம் என இருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் அதுதான் என்னுடைய கனவு படம்.” என இயக்குனர் AR.முருகதாஸ் பதில் அளித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…
 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் அடுத்த ஆக்ஷன் படத்தில் பெரிய மாற்றம்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் கைகோர்த்த அருண் விஜயின் அடுத்த ஆக்ஷன் படத்தில் பெரிய மாற்றம்... அதிரடி அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்?- எதிர்பார்ப்புகளை தூண்டிய முக்கிய நடிகரின் சுவாரசியமான பதில்! வைரல் வீடியோ
சினிமா

வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்?- எதிர்பார்ப்புகளை தூண்டிய முக்கிய நடிகரின் சுவாரசியமான பதில்! வைரல் வீடியோ

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக வந்த ரியல் வாத்தியார்... சூரியின் பள்ளி பருவ அட்டகாசங்களை பகிர்ந்த கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக வந்த ரியல் வாத்தியார்... சூரியின் பள்ளி பருவ அட்டகாசங்களை பகிர்ந்த கலக்கலான வீடியோ இதோ!