என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த காமெடியனாக திகழ்ந்த வைகைப்புயல் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களின்  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். 

ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையக்கிறார். தற்போது மாமன்னன் படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே தனது அடுத்த நகைச்சுவை சரவெடியாக வடிவேலு நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

வடிவேலுவின் ஃபேவரட் கதாபாத்திரங்களில் ஒன்றான நாய் சேகர் கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா காமெடி என்டர்டெய்னராக உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் 9ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Mark your calendars 🗓️ & get ready for a fun ride! 🤩 #NaaiSekarReturns 🐶💯 releasing on DEC 9⃣

Vaigai Puyal #Vadivelu 🌪️ in a @Director_Suraaj film 🎬 with @Music_Santhosh musical 🎶 produced by @LycaProductions #Subaskaran 🪙@gkmtamilkumaran 🤝🏼 @thinkmusicindia 💿 pic.twitter.com/svShexn7Ie

— Lyca Productions (@LycaProductions) November 25, 2022