மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில் அதிரடி திருப்பதாக, “பாதிக்கப்பட்ட மனைவிகளை, அவர்களது கணவர்மார்கள் எப்படி கையாண்டார்கள்?” என்பது தொடர்பான தகவல்கள், போலீசார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவர், அந்த பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் உயர் வகுப்பு குடும்பத்தினரை வைத்து, ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பினை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களே அதிகம் இருந்து உள்ளனர். அதிலும் குறிப்பாக, அதில் உள்ள பலரும் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் இருந்து உள்ளனர்.

அப்போது, அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் ஆண்கள் சிலர் தங்களின் மனைவியை மாற்றிக்கொண்டு அடிக்கடி உல்லாசமாக இருப்பார்கள் என்றும், அவர்களில் சிலர் அடிக்கடி ஃபேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு “நடக்க போகும் பார்ட்டிக்கு தங்களின் மனைவிகளை அழைத்து கொண்டு வந்து, எங்களைப் போல் நீங்களும் இப்படி குலுக்கள் முறையில் மாற்றி மாற்றி பிறரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டு, உங்களது ஆசையை தீர்த்து கொள்ளுங்கள்” என்று கூறி வந்ததாகவும் கூறப்பட்டது.

அதன்படி, இதில் கலந்து கொண்ட பல பெண்கள், வற்புறுத்தியே இப்படி தகாத முறையில் இப்படியான ஒரு செயலில் கணவர்களால் ஈடுபட வைக்கப்பட்டு உள்ளனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதன் காரணமாக, அந்த பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் மனைவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இப்படியாக, இந்த கும்பலிடம் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இது பற்றி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “எனது கணவர் அந்த வாட்ஸ்ஆப் குரூப்பில் வந்ததை வைத்து, என்னை இப்படி தவறாக நடக்கச் சொல்லி என்னை கொடுமை படுத்துகிறார்” என்று, புகார் அளித்திருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இது குறித்து வழக்குப் பதிவு செய்து அந்த வாட்ஜ்ஆப் குரூப்பை பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதன்படி, பல குடும்ப பெண்களை அவர்களின் கணவர்கள் இப்படி பாலியல் ரீதியான டார்ச்சர் செய்ததும் தெரிய வந்தது.

இப்படியாக, மனைவிகளை மாற்றி மிகவும் மோசமான இந்த பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததை கண்டறிந்து போலீசார் அவர்களில் முதலில் 6 பேரை முதலில் அதிரடியாக கைது செய்துனர். பின்னர், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “கைது செய்யப்பட்ட 7 பேரும் ஆலப்புழை, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்தவர்கள்” என்பது தெரிய வந்தது. 

மேலும், “இவர்கள் அனைவரும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலமாக ஒரு குழுவை ரகசியமாக தொடங்கி அந்த குழுவுக்கு கப்பிள்ஸ் மீட் என்கிற பெயரில், செயல்படுத்தி வந்திருக்கின்றனர்.

இவற்றுடன், இந்த குழுவில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினர்களாக வைத்துக்கொண்டு, அந்த கணவன் மற்றும் மனைவி என இருவரும் தங்களது விருப்பத்துடனும், கட்டாயத்தின் பேரிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்களாம்.

சில நேரம் இந்த குழுவில் உள்ள உறுப்பினர்களின் வீடுகளிலும், உல்லாச விடுதிகளிலும் இந்த சந்திப்பு நடக்கும் என்றும், இதனையடுத்து அவர்கள் தங்களது மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிப்பர்” என்கிற தகவலும் வெளியாகி உள்ளன.

குறிப்பாக, “ஒரு சில நேரங்களில் ஒரு பெண், பல ஆண்களின் ஆசைக்கும், ஒரு ஆண் பல பெண்களின் ஆசைக்கும் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்” என்கிற அதிர்ச்சி தகவலும் கிடைத்து உள்ளது.

முக்கியமாக, 'சில நேரங்களில் ஒரு பெண்ணை, ஒரே நேரத்தில் 3 ஆண்கள் பகிர்ந்து கொள்வதும் நிகழ்ந்து வருவதாகவும், ஒரு நாள் உறவுக்கு பணத்திற்கு பதிலாக சில ஆண்கள் தங்கள் மனைவிகளை வழங்குவதாகவும், அந்தக் குழுவில் சில நேரங்களில் இடம் பெற்றுள்ள தனி உறுப்பினர்கள் பணம் கொடுத்து விரும்பியவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வருவதும்” கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மிக முக்கியமாக, “சபல புத்தி உள்ள கணவன்கள், தங்களது மனைவிமார்கள் சம்மதிக்கவில்லை என்றால், அவர்களது குழந்தைகளை கொன்று விடுவேன் என்றும், நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்றும், தங்களது மனைவிகளை, அவர்களது கணவர்மார்கள் இப்படியே மிரட்டி கையாண்டு வந்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், முக்கிய குற்றவாளி 20 ஆன்லைன் குழுக்களில் உறுப்பினராக இருந்தனர் என்றும், அதில் ஒவ்வொரு குழுவிலும் சராசரியாக 2 ஆயிரம் தம்பதிகள் இருந்தனர் என்கிற அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.