ப்ரின்ஸ் படத்தின் அடுத்த பாடல் விரைவில்....தமன் ட்வீட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
By Aravind Selvam | Galatta | October 01, 2022 17:29 PM IST

தொகுப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் கடைசியாக டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் ப்ரின்ஸ் படத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்தினை தெலுங்கில் சூப்பர்ஹிட் அடித்த Jathi Rathnalu பட இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சத்யராஜ்,பிரேம்ஜி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் Maria Ryaboshapka என்ற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் கைப்பற்றியுள்ளார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.2022 தீபாவளி ரிலீசாக ப்ரின்ஸ் வெளிவர இருக்கிறது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி செம ஹிட் அடித்து வருகிறதுஇந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் செம ஜாலியான புது போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அதனை பகிர்ந்த இசையமைப்பாளர் தமன் , அடுத்த பாடல் ஒரு கானா பாடல் என்றும் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் படி Pan கானா பாடலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Super Fun O Fun laugh Riot #Diwali Coming to U Guys ❤️From Our Dear darling Brother @Siva_Kartikeyan 🔥 @anudeepfilm 🎧🎧🎧
— thaman S (@MusicThaman) October 1, 2022
Next Song is Even More Fun 🤩..#PanGanna Song coming o Coming 🔊🔊🔊🔊💥😅💃💃💃💃💃💃💃 pic.twitter.com/HF3zrYQj7H