தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி அமோக வெற்றி பெற்றது முதல் முறையாக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழகத்தின் முதல் சட்டசபை இன்று கூடியது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தொடர்ந்து அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர் பிறகு இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  பதவியேற்றனர்.

முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனான திரு.உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற முதல் சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி ஏற்கும்போது சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திரு.உதயநிதி ஸ்டாலின்  பதவி ஏற்றார். 

பின்னர்,

“தமிழகத்தின் பாரம்பரியமும் பெருமையும் கொண்ட சட்டமன்றம் இன்று கூடியபோது சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தலைமை கழகத்தினர் தொகுதி மக்கள், எனக்காக களப்பணி ஆற்றிய கழகத்தினர்,தோழமை கட்சியினர் உட்பட அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். இந்தப் பெருமைமிகு தருணத்தில் தொகுதி மக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றும் வண்ணம் உழைப்பேன் என்ற உறுதியுடன் சட்டமன்ற உறுப்பினராக என் பணிகளை தொடங்குகிறேன்”

என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.