“அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு..” மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான பதில்..! – வைரலாகும் வீடியோ உள்ளே..

மாரி செல்வராஜின் மாமன்னன் படம் பார்த்த பின் உதயநிதி பகிந்த தகவல் -  Udhayanidhi stalin about mari selvaraj maamannan response | Galatta

பரியேரும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களுக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்து வரவேற்பை பெற்றது. அதன்படி ரசிகர்களின் ஆரவாரமான கொண்டாட்டத்துடன் நேற்று மாமன்னன் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் தமிழகத்தில் மட்டும் சுமார் 600 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  பெரும்பாலும் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மாமன்னன் படத்தை ரசிகர்களுடன் படக்குழுவினர் பார்த்து ரசித்தனர். அதை தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அதில் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில்,  “மாமன்னன் மக்களை நம்பி எடுக்கப்பட்ட படம். நிச்சயமா நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு கொடுக்கணும் னு கொடுத்த படம். இந்த விஷயத்தை மக்கள் ஏத்துப்பாங்க ன்ற நம்பிக்கையில எடுக்கப்பட்ட படம்.  ஒரு விஷயத்தை மக்களுக்கு கொடுத்துட்டோம். இதை மக்கள் தான் ஆராய்ந்து விவாதம் செய்ய போறது மக்கள் தான். மக்கள் தான் அதற்கு பதில் சொல்லனும்.. இந்த படம் எடுக்கவே முடியாது னு நினைச்சேன். இதை சாத்தியப்படுத்தியதற்கு உதய் சாருக்கு தான் நன்றி சொல்லனும்.“ என்றார் மாரி செல்வாராஜ் .

அதை தொடர்ந்து படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 'மாமன்னன் படம் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ண படம். ஒரு ஆறு மாத உழைப்பு அந்த உழைப்பை மக்கள் வரவேற்று கொண்டாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கு.‌.” என்றார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் படங்களில் நடிக்கும் ஆசை உள்ளதா? என்ற கேள்விக்கு,  "அந்த ஆசை இந்த படத்தோட செத்துடுச்சு.. வாய்பில்லை.. வாய்பில்லை ராஜா.." என்றார். அதை தொடர்ந்து  "ஒரே படத்துல சமூகத்தை மாத்தனும் னு நாங்க சொல்ல வரல.‌. இது விழிப்புணர்வு படம். அந்த விழிப்புணர்வை மக்கள் உணரனும்.. அதற்கு அரசு வழிவகை செய்யும்."  என்றார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் மாமன்னன் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய முழு வீடியோ இதோ..

பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா மாரி செல்வராஜ்.? – மாமன்னன் ட்விட்டர் விமர்சனம் இதோ..
சினிமா

பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா மாரி செல்வராஜ்.? – மாமன்னன் ட்விட்டர் விமர்சனம் இதோ..

அடுத்தடுத்த முக்கிய படங்களின் அப்டேட்டுகள்.. களைகட்டும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்புகள் இதோ..
சினிமா

அடுத்தடுத்த முக்கிய படங்களின் அப்டேட்டுகள்.. களைகட்டும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்புகள் இதோ..

ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னம்.. வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னம்.. வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் பதிவு உள்ளே..