மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டித் தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலின்.. – வைரலாகும் பதிவு..

மாமன்னன் படக்குழுவினரை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் விவரம் உள்ளே - CM MK stalin wishes maamannan crew | Galatta

இயக்குனர் ராம் அவர்களின் உதவி இயக்குனராக கற்றது தமிழ் திரைப்படம் மூலம் தனது திரைப்பயணத்தை  தொடங்கி பின் பா ரஞ்சித் தயாரிப்பில் ‘பரியேரும் பெருமாள்’ படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே திரையுலகினர் வியக்க வைக்கும் அளவு கதையை நேர்த்தியாக படமாக கொடுத்து ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்றார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது படம் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் உடன் கூட்டணி அமைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கினார். முதல் படத்தை போலவே இரண்டாவது படத்திற்கு நல்ல கருத்துகளையே விமர்சனமாக பெற்றது கர்ணன் திரைப்படம். அதே நேரத்தில் வசூல் அடிப்படையிலும் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். அதன்படி துருவ் விக்ரம் நடிப்பில் கலை புலி தாணு தயாரிக்கும் கபடி போட்டியை மையமாக கொண்டு உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார். மற்றும் சொந்த தயாரிப்பில் மாரி செல்வராஜ் ‘வாழை’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதை தொடர்ந்து மாரி செல்வராஜ் இரண்டாவது முறையாக தனுஷ் உடன் கூட்டணி அமைக்கவுள்ளார். தொடர்ந்து முக்கிய திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் மாரி செல்வராஜின் மூன்றாவது திரைப்படமாக வெளியான திரைப்படம் மாமன்னன்.

உதயநிதி ஸ்டாலின் . வைகை புயல் வடிவேலு , கீர்த்தி சுரேஷ் மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைபடத்திற்கு ஒளிபதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்தது.

அதன்படி இன்று ஜூன் 29ம் தேதி உலகமெங்கும் மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக் ஓடிக் கொண்டிருகின்றது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை பகிர்ந்து படத்திற்கு தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் மாமன்னன் படம் பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் தனது சமூக வலைதள பக்கத்தில்  புகைப்படங்களை பகிர்ந்து முதல்வருடனான திரையிடல் நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,

“மாமன்னனை பார்த்து கட்டித் தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு. முக ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம்” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மாரி செல்வராஜின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மாமன்னனை பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு . @mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் ❤️❤️❤️ @Udhaystalin @arrahman @KeerthyOfficial @RedGiantMovies_ #MAAMANNAN 🤴 pic.twitter.com/1snE2uBQeF

— Mari Selvaraj (@mari_selvaraj) June 29, 2023

ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னம்.. வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இடம் பிடித்த மணிரத்னம்.. வாழ்த்து தெரிவித்த ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான்.. – வைரலாகும் பதிவு உள்ளே..

“உயிரும் நீயே.. உடலும் நீயே..” நடிகர் அஜித்தின் Travel Song இதுதான்.. இணையத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ வைரல்..!
சினிமா

“உயிரும் நீயே.. உடலும் நீயே..” நடிகர் அஜித்தின் Travel Song இதுதான்.. இணையத்தில் நடிகை ஷாலினி பகிர்ந்த வீடியோ வைரல்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..