அடுத்தடுத்த முக்கிய படங்களின் அப்டேட்டுகள்.. களைகட்டும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்புகள் இதோ..

பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான ஹரிஷ் கல்யாண் பட அப்டேடுகள் - Check Harish kalyan upcoming project glimpse | Galatta

தமிழ் சினிமாவின் இளம் நாயகனாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் வலம் வருபர் ஹரிஷ் கல்யான். கடந்த 2010 ல் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் திரைத்துறையில் நடிக்க தொடங்கிய இவர் பொறியாளன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து வில் அம்பு போன்ற சில படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யான் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திரைப்பயணமாக அமைந்தது ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் வாய்புகள் குவிய தொடங்கியது, அதன்படி இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாரள பிரபு, ஒ மண பெண்ணே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். துள்ளலான தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வளர்த்து வரும் ஹரிஷ் கல்யாண் இன்று பிறந்த நாள் காண்கிறார். அவருக்கு கலாட்டா குழுமம் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் மற்றும் பார்க்கிங் ஆகிய படங்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும்  'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்சாம் சிஎஸ் இசையமைக்கின்றார். கார் பார்கிங் தொடர்பாக நடைபெறும் பிரச்சனையை பேசுவது போல படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது.

Here we go! Buckle up for a world of drama, suspense, and emotions❤️‍🔥

Presenting you the first look of #Parking 🚗🅿️#HBDHarishKalyan #ParkingFirstLook @iamharishkalyan @Actress_Indhuja @sinish_s @Sudhans2017 @ImRamkumar_B @SamCSmusic @jsp2086 @philoedit @devarajulu29pic.twitter.com/ZS7V0wOpec

— Soldiers Factory (@SoldiersFactory) June 28, 2023

இதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் மற்றொரு திரைப்படம் ‘டீசல்’. ஆக்ஷன் அதிரடி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அடங்காதே பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். மேலும் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கின்றார். ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளையடுத்து படக்குழு டீசல் பட போஸ்டரை வெளியிட்டு அதனுடன் 50க்கும் மேற்பட்ட அதிகமான படப்பிடிப்பு தளங்கள் 1500க்கும் அதிகமான பணியாளர்களின் உழைப்பில் “இறுதிகட்ட” படப்பிடிப்பில் இருக்கும் டீசல் குழுவின் சார்பாக எங்கள் நாயகன் ஹரிஷ் கல்யாணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

150 க்கும் அதிகமான படப்பிடிப்பு தளங்கள்
1500 கும் அதிகமான பணியாளர்களின் உழைப்பில்
“இறுதிக்கட்ட” ..
படப்பிடிப்பில் இருக்கும் #Diesel #டீசல் குழுவின் சார்பாக எங்கள் நாயகன் @iamharishkalyan க்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் 💐💐#HBDHarishkalyan @AthulyaOfficial @devarajulu29 pic.twitter.com/HMAlQzuMnZ

— Shanmugam Muthusamy (@shan_dir) June 29, 2023

தற்போது வெளியாகியுள்ள டீசல் மற்றும் பார்கிங் பட போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரிஷ் கல்யாண் இப்படங்களை தவிர இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி தயாரிப்பில் ‘LGM’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ ஒடிடி ரிலீஸ் எப்போது? – அட்டகாசமான அப்டேட்டுடன் வெளியான வீடியோ இணையத்தில் வைரல்..

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..
சினிமா

இசையமைப்பாளராகும் கௌதம் மேனன்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.. – அட்டகாசமான அப்டேட்டுடன் இணையத்தில் வைரலாகும் வீடியோ..

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
சினிமா

முதல் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே உயிரிழந்த இயக்குனர்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..