அஜித் திரைப்பயணத்தில் இதுவே முதல் முறை – வசூல் சாதனை படைத்த துணிவு.. வைரலாகும் பதிவு இதோ..

1 மில்லியன் டாலரை எட்டியது அஜித் நடித்த துணிவு திரைப்படம் - Thunivu movie reach one million collection in north America | Galatta

பொங்கல் விடுமுறையையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் வெளியானது அஜித் நடித்து எச் வினோத் இயக்கிய துணிவு திரைப்படம். வெளியான நாள் தொடங்கி இன்று வரை திரையரங்குகளை ரசிகர்களின் கொண்டாட்டதுடன் அலங்கரித்து வருகிறது. கோலாகல கொண்டாட்டங்களுடன் உலகளவில் பல இடங்களில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் தற்போது வெற்றிநடைபோட்டு கொண்டிருகிறது. படம் அறிவிப்பிலிருந்து வெளியான நாள் வரை துணிவு படத்தின் தாக்கம் குறையாமல் பல இடங்களில் பேசப்பட்டு வருகிறது. வங்கி கொள்ளையை மையப்படுத்தி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட துணிவு படம் வெளியாகி தற்போது 6 நாள் கடந்த நிலையில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை துணிவு பட விநியோகஸ்தர்கள் அறிவித்து கொண்டிருக்கின்றனர்.  

இந்நிலையில் அமேரிக்கா நாட்டில் அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தை வெளியிட்ட சரிகம சீனிவாஸ் நிறுவனம் வட அமெரிக்க பகுதிகளில் துணிவு படம் அடைந்த வசூலை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. துணிவு திரைப்படம் தற்போது வட அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் 1 மில்லியன் டாலர் எட்டியுள்ளது. இது அஜித் குமார் திரைப்பயணத்தில் வட அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் ஒரு மில்லியனை தொட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை துணிவு திரைப்படம் அடைகிறது. இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் பதிவை வைரலாக்கி வருகின்றனர்.

#Thunivu 🤘🏾🤘🏾🤘🏾🤘🏾It's time to Join our Ajith sir in 1Million Club in NA🇺🇸🇨🇦
North America Comscore Reported gross has now officially crossed the $1M mark !! 💥💥
Thanks to all movie lovers and Ajith sir fans!@LycaProductions @Tentkotta pic.twitter.com/ct0v79DG5K

— Sarigama Cinemas (@sarigamacinemas) January 16, 2023

மேலும் படம் வெற்றிகரமாக உலகளவில் பல இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் வசூல் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படக்குழு சார்பில் துணிவு படத்தின் உலகளாவிய வசூல் அதிகார பூர்வமாக விரைவில் அறிவிக்கக்கூடும்.

நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வரிசையில் 3வது முறையாக அஜித்குமார் - போனி கபூர் - H.வினோத் - நீரவ்ஷா கூட்டணியில் துணிவு படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், சிபி புவனசந்திரன், ஜான் கொக்கென் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோ என்ற பட்டியலில் தனித்துவமான அடையாளம் கொண்டவர் அஜித் குமார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் அஜித் பொதுவாகவே ரசிகர்களை சந்திப்பது. ரசிகர்களுடன் உரையாடுவது இவற்றையெல்லாம் தவிர்ப்பவர். குறிப்பாக எந்தவொரு சமூக வலைத்தளத்திலும் இல்லாமல் இருப்பவர். படம் குறித்த விளம்பரங்களையோ இசை வெளியீடு விழாக்களிலிலோ கலந்து கொள்ளாமல் இருப்பவர் என்றாலும் அஜித்தின் தனி நபர் வாழ்வியல் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருந்து வருகிறது. அதனாலே ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அளவு கடந்து இருக்கின்றது. எந்த அஜித் திரைப்படம் வெளியானாலும் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்குமளவு ரசிகர் பட்டாளத்தை அஜித் பல ஆண்டுகளாக தக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் 'காதல் தி கோர்' படத்தின் புது அப்டேட் .. ரசிகர்கள் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..
சினிமா

ஆக்ஷன் கிங்கின் அட்டகாசமான Getup - தளபதி 67 படத்திற்காக இருக்குமோ.. வைரலாகும் புகைப்படம் இதோ..

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும்  - புகைப்படங்கள் இதோ..
சினிமா

பழம்பெரும் சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் மறைவை அனுசரித்த தனுஷும் கேப்டன் மில்லர் படக்குழுவினரும் - புகைப்படங்கள் இதோ..