"ரொம்ப வருத்தி எடுத்துருச்சு!"- மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸின் கடினமான அனுபவங்களை பகிர்ந்த தியாகராஜன் குமரராஜா! வைரல் வீடியோ

மாடர்ன் லவ் சென்னை கடின அனுபவங்கள் பற்றி தியாகராஜன் குமாரராஜா,thiagarajan kumararaja about restrictions in amazon prime video | Galatta

ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படங்களின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் மாடர்ன் லவ் சென்னை எனும் ஆந்தாலஜி வெப் சீரிஸ் வருகிற மே 18ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஒளிபரப்பாக இருக்கிறது. சென்னையை மையப்படுத்திய அழகான 6 காதல் கதைகளை கொண்ட இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி வெப் சீரிஸின் 6 எபிசோடுகளை, இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, குக்கூ, ஜோக்கர் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய படங்களின் இயக்குனர் ராஜு முருகன், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 படங்களின் இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்குனர் அக்ஷய் சுந்தர் ஆகிய 6 இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு உரையாடிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் அந்த வகையில், "மாடர்ன் லவ் சென்னை வெப் சீரிஸில் பணியாற்றியது நன்றாக இருந்ததா ஒரு வித்தியாசமான அனுபவமா?" எனக் கேட்ட போது, "ரொம்ப வருத்தி எடுத்துடுச்சு" என்றார். தொடர்ந்து "படம் இயக்குவது என்றாலும் அப்படி தானே?" என கேட்டபோது, “படம் அப்படிதான்.. இது அதைவிட கஷ்டமாக இருக்கிறது. படத்தில் இருக்கும் சில ADVANTAGES இதில் இல்லை... என்ன ADVANTAGE என கேட்கிறீர்களா? படத்தில் நாம் ஒரு தயாரிப்பாளரிடம் முதலில் கதை சொல்கிறோம். இதுதான் பண்ணப் போகிறோம் என சொல்கிறோம். அதன் பிறகு முக்கால்வாசி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இங்கே அமேசானுக்கு என்று சில கட்டுபாடுகள் இருக்கின்றன. பிறகு இது நியூயார்க் டைம்ஸ் உடன் அவர்களுக்கு இணைப்பு இருப்பதால் அதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மேலும் நாம் படம் செய்யும்போது நாம்தான் இயக்குனர் ஒன்றும் பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் இதில் உடன் பணியாற்றும் இன்னும் ஐந்து இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒரு இயக்குனராக நாம் அவர்களிடம் சில விஷயங்கள் செய்ய முடியாது அல்லவா… இப்போது அதை தயாரிப்பாளர்கள் செய்தால் தயாரிப்பாளர்களே அப்படித்தான் என சொல்லலாம்... ஆனால் இயக்குனராக இருக்கும் போது “நீ ஒரு இயக்குனர் நீயே இப்படி பண்ணலாமா?” என்ற கேள்வி வரும், “இவன் பெரிய டைரக்டரா? இவன் நமக்கு சொல்கிறான்!” என்ற கேள்வி வரும் இது மாதிரி எதுவும் வரக்கூடாது என்பதற்காக மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டியிருந்தது.” என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் “ஒரு உதாரணத்திற்கு கேட்கிறோம் ஒரு படத்தில் இதை நீங்கள் எளிதாக செய்துவிட முடியும் ஆனால் அமேசான் நியூயார்க் டைம்ஸ் இணைப்பு இருப்பதனால் இதை செய்ய முடியவில்லை என ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?” என்ன கேட்டபோது, “சில நேரங்களில் கதாபாத்திரங்களின் பெயர்கள் கூட இந்த மாதிரி வைக்கக் கூடாது என சொல்வார்கள். அதற்கு மதம் சார்ந்து ஒரு விஷயம் இருக்கிறது என சொல்வார்கள். படத்தில் நாம் அதை பெரிதாக கண்டு கொள்ளமாட்டோம் ஆனால் இங்கே அதை ஒரு விஷயமாக வைக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தேவி என இருந்தால் தேவி என்றால் கடவுள் என்ற பொருள் கொடுக்கிறது. அப்படி வைக்க கூடாது என சொல்கிறார்கள்.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட தியாகராஜ குமார் ராஜாவின் அந்த முழு பேட்டி இதோ…
 

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ
சினிமா

தங்கலான், வாடிவாசல், கேப்டன் மில்லர், ஜப்பான், SK21 வரிசையில் ஜீவி பிரகாஷின் அடுத்த பிரம்மாண்ட படம்! மிரட்டலான அப்டேட் இதோ

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த ஸ்பெஷல்... மனதை மயக்கும் அட்டகாசமான GLIMPSE இதோ!
சினிமா

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட அடுத்த ஸ்பெஷல்... மனதை மயக்கும் அட்டகாசமான GLIMPSE இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்! சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்! சுவாரஸ்யமான புதிய தகவல் இதோ