சீயான் விக்ரமின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பவர்ஃபுல் பரிசு… மாஸ் அப்டேட் உடன் வந்த தங்கலான் பட அதிரடியான புது போஸ்டர் இதோ!

சீயான் விக்ரமின் பிறந்தநாளில் தங்கலான் பட ஸ்பெஷல் அப்டேட்,thangalaan special surprise on chiyaan vikram birthday | Galatta

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு தேர்ந்த நடிகராக அந்த கதாபாத்திரத்திற்காக கடின உழைப்பை கொடுத்து மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் நடிகர் சீயான் விக்ரம். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் - 1 என அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஹட்ரிக் ட்ரீட் கொடுத்தார். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் மிரட்டலான ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய விக்ரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரள வைத்தார். தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இந்த 2023 ஆம் ஆண்டில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

கடைசியாக தனது சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அடுத்த தங்கலான் திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். அடுத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக தயாராகும் சார்பட்டா ரவுண்ட் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. மேலும் இதர அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1800-களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் திரைப்படமாக கேஜிஎஃப் கதை களத்தை மையப்படுத்தி பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் தங்கலான் திரைப்படத்தை தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்குகின்றன. 

சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் திரைப்படத்தில்  நடிக்கின்றனர்.  கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக ரிலீசாக உள்ள தங்கலான் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகான OTT ரிலீஸ் உரிமையை NETFLIX நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சீயான் விக்ரமின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படமாக உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், வருகிற ஏப்ரல் 17ம் தேதி சீயான் விக்ரமின் பிறந்தநாள் அன்று தங்கலான் திரைப்படத்திலிருந்து பவர்ஃபுல்லான ஒரு சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு காத்திருப்பதாக தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சீயான் விக்ரமின் மிரட்டலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ…
 

Get ready for something powerful from the world of #Thangalaan!

Witness a slice of flesh on #ChiyaanVikram's birthday
17th April, 2023@Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @DanCaltagirone @thehari___ pic.twitter.com/9FnawFWmzb

— Studio Green (@StudioGreen2) April 9, 2023

ராகவா லாரன்ஸின் பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக வரும் ருத்ரன்… அதிரடியாக வந்த மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் பக்கா ஆக்ஷன் ட்ரீட்டாக வரும் ருத்ரன்… அதிரடியாக வந்த மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

தளபதி விஜயின் வாரிசு கூட்டணி மீண்டும் இணைகிறதா..? தயாரிப்பு தரப்பின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு கூட்டணி மீண்டும் இணைகிறதா..? தயாரிப்பு தரப்பின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!
சினிமா

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!