குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!

நயன்தாரா விக்னேஷ் சிவன் குலதெய்வ கோவிலில் வழிபாடு,Nayanthara and vignesh shivan visits kanji kamatchi temple in vazhuthur | Galatta

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் அடுத்தடுத்து வரிசையாக 5 படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. முன்னதாக தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவோடு இணைந்து நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக O2 படத்தில் நடித்த நயன்தாரா மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த காட்பாதர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார். இதனை அடுத்து பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் படத்திலும் கதாநாயகியாக கலக்கிய நயன்தாரா நடிப்பில், கடைசியாக கடந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படம் கனெக்ட். மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக மக்களை கவர்ந்த கனெக்ட் திரைப்படம் இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தற்போது முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் இறைவன் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதேபோல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் முதல் முறையாக அஜித்குமாரோடு இணைய இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. லைககா ப்ரொடுக்ஷன் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் இந்த AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. 

இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படமாக தயாராகும் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் தனது திரைப்பயணத்தில் ஆறாவது படமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே படங்களின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அழகான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அழகிய ஆண் குழந்தைகள் இருவருக்கும் உயிர் ருத்ரோநீல் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு முன்பாக இருவரும் விக்னேஷ் சிவனின் குலதெய்வமான தஞ்சாவூரின் வழுத்தூரில் அமைந்துள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது திருமணத்திற்கு பிறகு, குழந்தைகள் பிறந்ததற்கு பிறகு மீண்டும் இருவரும் குலதெய்வ வழிபாடு செய்துள்ளனர். இன்று ஏப்ரல் ஐந்தாம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுவாமி வழிபாடு செய்துள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

குலதெய்வ கோயிலில் வழிபட்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி!@VigneshShivN #Nayanthara #Vigneshshivan #WikkiNayan #Galatta pic.twitter.com/62kpMYo6Bc

— Galatta Media (@galattadotcom) April 5, 2023

தளபதி விஜயின் துப்பாக்கி படம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தளபதி விஜயின் துப்பாக்கி படம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியங்களை பகிர்ந்த ARமுருகதாஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சினிமா

"டைரக்டர் ஃபோன் பண்ணி திட்டினார்!"- கையெழுத்திடும் நேரத்தில் சூப்பர் ஹிட் படத்தை கைவிட்ட வாணி போஜன்! வீடியோ உள்ளே

சிலம்பரசன்TRன் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த வாணி போஜன்! வைரல் வீடியோ
சினிமா

சிலம்பரசன்TRன் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு குறித்து மனம் திறந்த வாணி போஜன்! வைரல் வீடியோ