"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம்!"- அசத்தலான முதல் GLIMPSE இதோ

ரஜினிகாந்தின் ஆசியுடன் தொடங்கிய நயன்தாராவின் 75வது படம்,nayanthara in lady superstar 75 movie starts with rajinikanth blessings | Galatta

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயக களமிறங்கிய நடிகை நயன்தாரா தனது இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆன சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து கஜினி வல்லவன் பில்லா யாரடி நீ மோகினி ஏகன் ஆதவன் ராஜா ராணி ஆரம்பம் பாஸ் என்கிற பாஸ்கரன் தனி ஒருவன் நானும் ரவுடிதான் இருமுகன் இமைக்கா நொடிகள் விஸ்வாசம் பிகில் தர்பார் அண்ணாத்த உள்ளிட்ட பல தமிழ் படங்களில் தான் நாயகியாக கலக்கிய நயன்தாரா ஹீரோயின்களை முன்னிறுத்திய மாயா டோரா அறம் ஐரா மூக்குத்தி அம்மன் நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அசத்தியுள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவோடு இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல், வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக O2, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மெகா ஹிட்டான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த காட்பாதர் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் ஆகிய படங்களில் கதாநாயகியாக கலக்கிய நயன்தாரா நடிப்பில், கடைசியாக மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படமாக இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக வெளிவந்த கனெக்ட். திரைப்படம் மக்களை கவர்ந்தது.

முன்னதாக நீண்ட காலமாக காதலித்து வந்து நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். அவர்களுக்கு ருத்ரோநீல் N சிவன் & தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தெரிவித்தனர். அடுத்ததாக தற்போது முதல்முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகும் இறைவன் படத்திலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலையாளம், தமிழ், தெலுங்கு & ஹிந்தி என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகியாக திகழும் நடிகையின் நயன்தாரா, அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 75வது திரைப்படமாக தயாராகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக லேடி சூப்பர் ஸ்டார் 75 என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ஜெய், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, அச்சுத்குமார், சுரேஷ் , குமாரி சச்சு, ரேணுகா மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ZEE ஸ்டூடியோஸ், நாட் S ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் தமன்.S இசையமைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்திற்கு பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் 75 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்த படக்குழுவினர் அவருடைய நல்லாசி பெற்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது மற்றும் படப்பூஜை வீடியோவை லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர் வைரலாகும் அந்த வீடியோ இதோ...
 

தளபதி விஜயின் வாரிசு கூட்டணி மீண்டும் இணைகிறதா..? தயாரிப்பு தரப்பின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு கூட்டணி மீண்டும் இணைகிறதா..? தயாரிப்பு தரப்பின் பதிலால் உற்சாகத்தில் ரசிகர்கள்! விவரம் இதோ

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!
சினிமா

குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ இதோ!

அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகிய பிரபல நடிகை!- ரசிகர்களுடன் பகிர்ந்த இனிப்பான செய்தி! வைரல் புகைப்படங்கள் இதோ
சினிமா

அழகிய ஆண் குழந்தைக்கு தாயாகிய பிரபல நடிகை!- ரசிகர்களுடன் பகிர்ந்த இனிப்பான செய்தி! வைரல் புகைப்படங்கள் இதோ