சீரியல்கள் வீட்டில் இருப்பவர்களின் அன்றாட பொழுதுபோக்காக மாறிப்போனது.மக்களின் மனம் கவர்ந்து ஹிட் சீரியல்கள் பல உள்ளன.குறிப்பாக விஜய் டிவியின் சீரியல்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை சமீபகாலமாக பெற்று வருகின்றன.ஒரே சேனலில் இருக்கும் இரண்டு தொடர்கள் இணைந்து அவ்வப்போது மெகா சங்கமங்கள் சிலவற்றை சேனல்கள் ஒளிபரப்பும்.

வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட குடும்ப தொடர்களை விஜய் டிவி தொடர்ந்து தயாரித்து வருகின்றனர்,இதில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரிய ஹிட் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

ஐந்து முன்னணி ஜோடிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருடன் அவ்வப்போது முக்கிய தொடர்கள் இணைவது வழக்கம்.அப்படி தற்போதும் தீபக் நக்ஷத்திரா நடித்து வரும் தமிழும் சரஸ்வதியும் தொடருடன் இணைந்துள்ளனர்.சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கினாலும் ரசிகர்களின் பேராதரவை இந்த தொடர் பெற்றுள்ளது.

தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த மஹாசங்கமத்தில் விஜய் டிவியின் மற்றுமொரு சூப்பர்ஹிட் தொடரான பாக்கியலக்ஷ்மி தொடரும் இணைந்துள்ளது,மூன்று பெரிய தொடரின் நட்சத்திரங்களையும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.