காதலியான யோகா டீச்சர், காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜெய்ப்பூரை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர், அந்த பகுதியில் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரிடம், நிறைய பேர் யோகா கற்றுக்கொண்டு வருகின்றனர்.

இப்படியான சூழலில் தான், 28 வயது யோகா மாஸ்டரான இந்த இளைஞருக்கு, அந்த பகுதியைச் சேர்ந்த 35 வயதான யோகா டீச்சர் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

இவர்கள் இருவரும் ஒரே துறையில் அதுவும் யோகா மாஸ்டராக பல ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றி வந்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில், 35 வயதான யோகா டீச்சரான அந்தப் பெண், திருமணமாகி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் தான், இந்த  35 வயதான யோகா டீச்சருடன் அந்த 28 வயதான இளைஞருக்கு காதல் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கிய நிலையில், இருவரும் நெருக்கமாகி உள்ளனர். 

அத்துடன், இவர்களது காதல் நாளுக்கு நாள் நெருக்கமான நிலையில், அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த 16 ஆம் தேதி அந்தப் பெண், தனது காதலனை செல்போனில் அழைத்திருக்கிறார். 

அப்போது, “வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு வருமாறு” அந்த யோகா டீச்சர் அழைத்திருக்கிறார்.

அதன்படியே, அங்கு வந்த அந்த காதலன் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு, இரவு தனது வீட்டிற்கு கிளம்பும் முன்பாக, “நானும் உன்னுடன் உனது வீட்டிற்கு வருகிறேன்” என்று, அந்த காதலி கேட்க, அதற்கு அந்த காதலனும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அதன்படியே, அவர்கள் இருவரும் ஒன்றாக அந்த இளைஞரின் வீட்டுக்கு சென்று உள்ளனர். வீட்டிற்கு சென்றதும் “தலைவலி இருப்பதாக” கூறி, அந்த இளைஞர் படுத்து தூங்கி உள்ளார்.

அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென்று இடுப்பு கீழ் பகுதியில் இருந்து வலி ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் அந்த இளைஞர் கண் விழித்துப் பார்த்த போது, தனது படுக்கை முழுவதும் ரத்தக்கறையாக இருந்திருக்கிறது.

அதே நேரத்தில், நேரம் செல்ல செல்ல வலி அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு அந்த இளைஞர் தன்னுடைய பிறப்புறுப்பு அறுபட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து வலியால் துடித்திருக்கிறார். 

அத்துடன், “தன்னுடன் இருந்த பெண்ணை அவர் தேடி உள்ளார். ஆனால், அந்த பெண் அங்கு இல்லை. 

மேலும், அந்த இளைஞர் சத்தம் போட்டு கத்தி உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். 

பின்னர், அந்த பெண்ணுக்கே போன் பண்ணிய அந்த காதலன் உதவி கேட்டிருக்கிறார். இதனால், மனம் இறங்கி வந்த அந்த பெண், மீண்டும் அந்த இளைஞனின் வீட்டிற்கு வந்த அந்த பெண், அந்த இளைஞனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.

அங்கு, தீவிர சிகிச்சைப் பிறகு கடந்த 18 ஆம் தேதி வியாழக் கிழமை மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பிய நிலையில், அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, இது தொடர்பாக புகார் அளித்து உள்ளார். 

இது குறித்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். 

ஆனால், அந்த பெண் தற்போது தலைமறைவாக இருப்பதால், அந்தப் பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “சம்மந்தப்பட்ட இளைஞருனும், அந்தப் பெண்ணும் நெருக்கமாகக் காதலித்து வந்த நிலையில், இந்த இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, அந்த பெண்ணிடம் கூறி இருக்கிறார்.

ஆனால், அந்த பெண், “நீ என்னைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்” என்று, தனது காதலனை கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

ஆனாலும், கல்யாணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுக்கவே, அந்தப் பெண் இப்படி செய்திருக்கலாம்” என்றும், போலீசார் சந்தேகப்படுகின்றனர். 

இதற்காகவே, “இரவு உணவில் மயக்க மருந்து கலந்துக்கொடுத்துவிட்டு, காதலன் தூங்கியதும் இப்படி செய்திருக்கலாம்” என்றும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.