தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான தீனா, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை ஈர்த்தார். பவர் பாண்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தும்பா படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், கைதி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கார்த்தியுடன் இணைந்து காமெடி சென்டிமென்ட் காட்சியிலும் அசத்தியிருப்பார். 

Thalapathy Vijays Mokka Joke to KPY Dheena

கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்களில் தீனாவும் ஒருவர். எனவே சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவுடன் லைவ்வில் தோன்றி தனது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் தீனா. 

Thalapathy Vijays Mokka Joke to KPY Dheena Thalapathy Vijays Mokka Joke to KPY Dheena

மாஸ்டர் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள தீனா, தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்தும். அவருடன் பழகிய நாட்கள் பற்றியும் கூறினார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில், கைதி படத்தில் உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டினாராம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் செய்த எபிசோட் ஏதாவது இருந்தா காட்டுங்கள் என்றார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்தில், மொக்க ஜோக்குகளை பகிர்ந்து கொள்வோம். அதை விளக்கிய தீனா, ஒருத்தன கோபாலு கோபாலு என்று எல்லோரும் ஆழைக்கிறார்கள்.. ஏன்னு சொல்லுங்க என்றதும் தளபதி யோசிக்கத்துவங்கினார். நீங்களே சொல்லுங்க என்றதும்.. அவன் பெயர் கோபாலு அண்ணே என்றேன். ஷப்பா என்றார். பின் அவர் ஒரு மொக்க ஜோக் கூறினார். ஏரியா அதுக்கு ஆப்போசிட் என்ன என்று கேட்டார். நான் ஆப்போசிட் ஏரியா என்றேன். அதற்கு அவர் இறங்குயா என்றார். திரையுலகின் தளபதியாக இருந்தாலும், பிறரிடம் பழகும் விதம் எளிமையாக உள்ளது என புகழாரம் சூட்டுகிறார் தீனா.