ஊரடங்கு நேரத்தில் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கௌதம் மேனன் இயக்கத்தில் STR மற்றும் த்ரிஷா நடித்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஒரு சான்ஸ் குடு பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 

Vishnu Vishal Wants To Act In Gautham Menons Film Vishnu Vishal Wants To Act In Gautham Menons Film

ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த பாடலில் ஷாந்தனு பாக்கியராஜ், கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். கார்த்திக் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணன் இந்த பாடலுக்கு கோரியோகிராஃப் செய்திருந்தார். 

Vishnu Vishal Wants To Act In Gautham Menons Film Vishnu Vishal Wants To Act In Gautham Menons Film

ரசிகர்களை தாண்டி திரைப்பிரபலங்களையும் ஈர்த்து வருகிறது இந்த பாடல். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பதிவில், ஷாந்தனு மற்றும் கலையரசனின் பெர்ஃபார்மன்ஸை பாராட்டியுள்ளார். மேலும் இயக்குனர் கெளதம் மேனனிடம், எனக்கும் உங்க டைரக்ஷனில் சான்ஸ் தாங்க சார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு அதிக லைக்குகளுடன் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.