இந்திய திரையுலகில் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர் சியான் விக்ரம். தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் அடுத்த படத்தில் இணையவுள்ளார். 

Chiyaan60 Official Announcement By KarthikSubbaraj

சியான் விக்ரமுடன் முதல் முறையாக துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். படத்திற்கு படம் வித்தியாசம் தரும் கார்த்திக் சுப்பராஜ், இதிலும் தனது மாறுபட்ட ஜானரில் விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். 

Chiyaan60 Official Announcement By KarthikSubbaraj

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த காம்போவை கொண்டாடிவருகின்றனர் திரை விரும்பிகள். போஸ்டரில் துப்பாக்கி உள்ளதால் நிச்சயம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.