தமிழகத்தின் முன்னணி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ் நிறுவனம்.தமிழில் தங்கள் ஒளிபரப்பை சில வருடங்களுக்கு முன்னரே ஜீ நிறுவனம் தொடங்கினர்.இருந்தாலும் தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகளால் மக்கள் மனதில் இடம்பிடித்தனர்.

Zee Tamil Starts Serial Shoot With Safety Measures

நிகழ்ச்சிகளை தாண்டி மக்களை ஜீ தமிழ் பக்கம் இழுத்தது அவர்களின் தொடர்கள் தான் செம்பருத்தி,பூவே பூச்சூடவா,யாரடி நீ மோஹினி என்று இந்த தொடர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.ஜீ தமிழ் தொடர்களில் சமீபத்தில் இணைந்த ஒரு தொடர் நீதானே என் பொன்வசந்தம்.

Zee Tamil Starts Serial Shoot With Safety Measures

இந்த தொடர் கடந்த பிப்ரவரி முதல் ஒளிபரப்பை தொடங்கியது.கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டதால் இந்த தொடரும் பாதிக்கப்பட்டது.தற்போது அரசு அனுமதியளித்தபடி ஜீ தமிழ் இந்த தொடரின் ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ளது.இது குறித்த வீடீயோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளனர்.