'லியோ' படப்பிடிப்பை முடித்த கையோடு மக்கள் இயக்கத்தினரை சந்தித்த தளபதி விஜய்.. பின்னணி என்ன..?

மக்கள் இயக்கத்தினரை சந்தித்து வரும் தளபதி விஜய் விவரம் உள்ளே - Thalapathy vijay meet his vijay makkal iyakkam members | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் இருந்து வருபவர் தளபதி விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் விமர்சன அளவிலும் வசூல் அளவிலும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற பெருமையை பெற்றது. அதை தொடர்ந்து தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வந்தார். செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் அட்டகாசமான அதிரடி காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு  நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய் நேற்று லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். அதை தொடர்ந்து மும்முரமாக தற்போது நடைபெற்று வரும் லியோ திரைப்படம் விரைவில் நிறைவடைந்து வரும் ஆயுத பூஜை பண்டிகை வெளியீடாக பிரமாண்டமாக உலகளவில் வெளியாகவுள்ளது.  இதையடுத்து தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டனியில் ‘தளபதி 68’ படத்தில் ஏ ஜி எஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். லியோ படத்தின் ரிலீஸ் கும் பின் இப்படத்திற்கான படபிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல நல தொண்டுகளையும் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல மக்கள் சேவையை தமிழ் நாடு முழுவதும் செய்து வருகிறார் நடிகர் விஜய், இதன் அடுத்த கட்ட நகர்வாக சமீபத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு தளபதி விஜய் ‘கல்வி விருது விழா’ என்ற பெயரில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தினார். தளபதி விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்திய இந்த விழாவில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு ஊக்க தொகை விஜய் வழங்கினார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் விஜய் மேடையிலேயே நின்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்வு மிகப்பெரிய அளவு பொதுமக்களால் பேசப்பட்டது. மேலும் விஜயின் அரசியல் வருகைக்கு தொடக்க புள்ளியாக இந்த நிகழ்வு இருந்தது என்று அரசியல் பிரமுகர்களும் அலசினார்கள். ஆனால் இது கல்விக்கான விழா மட்டுமே என்று விஜய் தரப்பில் முன்னதாகவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இடையே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்திற்கு பின் திரைதுறையில் சில காலம் ஒய்வு எடுத்து அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் வதந்திகள் பரவியது.

இந்நிலையில் இன்று தளபதி விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தினரை இன்று சென்னை பனையூர் அலுவலத்தில் சந்தித்து வருகிறார். இந்த நிகழ்வு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜயின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தற்போது இணையத்தில் பல கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக நடைபெற்ற கல்வி விருது விழாவில் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டதால் இந்த நிகழ்வில் பணியாற்றிய தொகுதி நிர்வாகிகளை சந்திக்க முடியாமல் போனது. அதனால் அவர்களை சந்திக்கவே இந்த நிகழ்வு என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து கொண்டு வரும் நிகழ்விற்கு பிறகே சந்திப்பு குறித்து விளக்கமாக தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.

 

ஏ அண்ணன் வரார் வழிவுடு.... மாஸ் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்!🔥@actorvijay @BussyAnand @Jagadishbliss @TVMIoffl #ThalapathyVijay #VijayMakkalIyakkam #VMI #Leo #Thalapathy #Vijay #Panaiyur #Galatta pic.twitter.com/bcFuOxoVR4

— Galatta Media (@galattadotcom) July 11, 2023

 

ஆக்ஷன் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கும் அட்லி.. – ஷாருக் கானின் ‘ஜவான்’ சிறப்பு முன்னோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டும் 6 சிறந்த தருணங்கள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

ஆக்ஷன் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கும் அட்லி.. – ஷாருக் கானின் ‘ஜவான்’ சிறப்பு முன்னோட்டத்தில் சுவாரஸ்யம் கூட்டும் 6 சிறந்த தருணங்கள்..

பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்.. அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு... விவரம் உள்ளே..
சினிமா

பிரபல சின்னத்திரை நடிகர்கள் வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்.. அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு... விவரம் உள்ளே..

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!
சினிமா

பன்னாட்டு திரைப்பட மேடையில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா.. - விருதுகளை அள்ளிய 'கண்ணே கலைமானே’ திரைப்படம்..!