கொண்டாடி கொளுத்திய தளபதி விஜய் ரசிகர்கள்... லியோ பட 'நா ரெடி' பாடல் படைத்த பக்கா மாஸ் சாதனை! விவரம் உள்ளே

தளபதி விஜயின் லியோ பட நா ரெடி பாடல் படைத்த சாதனை,Thalapathy vijay in leo movie naa ready song crossed 100 million views on youtube | Galatta

தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ துரை படத்தில் இடம்பெற்றுள்ள நான் ரெடி பாடல் தற்போது புதிய சாதனை ஒன்று படைத்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்று தான் லியோ. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கின. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக சஞ்சய் தத் நடித்துள்ள ஆண்டனி தாஸ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ஹெரால்டு தாஸ் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவாக லியோ படக்குழு வெளியிட்ட மிரட்டலான GLIMPSE வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஹிட் ஆனது. அனிருத் இசையில் விஷ்ணு எடவன் எழுதிய இந்த நான் ரெடி பாடலை தளபதி விஜய் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல பாடகருமான அசல் கோளார் இந்த பாடலில் ராப் பகுதியை எழுதி பாடியிருக்கிறார்.பக்கா செலிப்ரேஷன் மோடில் வந்த இந்த நான் ரெடி பாடல் ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது நா ரெடி பாடலில் லிரிக் வீடியோ யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஏற்கனவே தளபதி விஜயின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங், பீஸ்ட் பட அரபிக் குத்து, வாரிசு பட ரஞ்சிதமே பாடல்களின் லிரிக் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் நிலையில் தற்போது "நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பது குறிப்பிடப்பட்டது.
 

Tow to to tow-ing into the 1️⃣0️⃣0️⃣ MILLION CLUB ! ❤️‍🔥😎#NaaReadyHits100MViews 💥

🎯🔥➡️ https://t.co/p82ebI7E21#Thalapathy @actorvijay @Dir_Lokesh @anirudhofficial @7screenstudio @Jagadishbliss @immasterdinesh #NaaReady #Leo pic.twitter.com/SU9Ur7b3tX

— Sony Music South (@SonyMusicSouth) August 16, 2023