வைகைப்புயல் வடிவேலுவின் டப்பிங் அலப்பறைகள்... சந்திரமுகி 2 படக்குழு வெளியிட்ட கலகலப்பான வீடியோ இதோ!

வைகைப்புயல் வடிவேலுவின் சந்திரமுகி 2 டப்பிங் வீடியோ,vadivelu dubbing video from chandramukhi 2 movie | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் டப்பிங்கில் கலக்கும் வைகைப்புயல் வடிவேலுவின் கலகலப்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியில் உள்ளது.  கடந்த 1993 ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர்கள் மோகன்லால், சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோரது நடிப்பில் தயாராகி வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் மணிசித்திரதாழ். மலையாளத்தில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  இளைய திலகம் பிரபு ஜோதிகா ஆகியோரது நடிப்பில் கடந்த 2005ல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்படங்களில் முக்கிய படமாக பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும், சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதையின் நாயகன் நாயகியாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்து நடித்துள்ளனர். வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.  

விறுவிறுப்பாக நடைபெற்ற சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக நிறைவடைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான பக்கா ஹாரர் காமெடி ஃபேமிலி என்டர்டெயன்ராக ட்ரீட்டாக வருகிற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி & கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்காக சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான பின்னணி இசை சேர்த்த இசை அமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் சந்திரமுகி 2 படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக தனது முதல் விமர்சனத்தை கொடுத்திருந்தார்.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான தங்களது டப்பிங் பணிகளை ராகவா லாரன்ஸ் மற்றும் வைகைப்புயல் வடிவேலு நிறைவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் டப்பிங் ஸ்டுடியோவில் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக டப்பிங்கில் ஈடுபட்ட வைகைப்புயல் வடிவேலுவின் கலகலப்பான வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. முருகேசன் கதாபாத்திரத்தில் வடிவேலு தனக்கே உரித்தான பாணியில் கலக்கும் இந்த டப்பிங் வீடியோவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் “”முருகேசா IS BACK என ட்ரெண்டாக்கி வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ…