"லியோ பத்தியெல்லாம் சொல்ல முடியாது போ!"- வைரலாகும் மன்சூர் அலிகானின் அட்ராஸிட்டி நிறைந்த சிறப்பு பேட்டி இதோ!

லியோ படம் பற்றி மன்சூர் அலிகானின் சிறப்பு பேட்டி,Mansoor ali khan in special interview about thalapathy vijay in leo | Galatta

மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி வருகிறது லியோ திரைப்படம். தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசைக்கிறார். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 6 மாதங்களில் 125 நாட்கள் நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமக்கு கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு அட்டகாசமாக பேட்டி கொடுத்த மன்சூர் அலிகான் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில், “லியோ திரைப்படம்... இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எனும் இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனராக இருக்கும் ஒரு இயக்குனர் ஒரு நடிகரை தேடுகிறார் அது யார் என்று பார்த்தால் மன்சூர் அலிகான்!” என சொன்ன போது, “கிடையாது அவர் நிறைய தேடுவார். ஏன் ஒரு பேட்டியே கொடுத்துவிட்டார் ஒரு மனிதர் அந்த ஹிந்தி நடிகர் அனுராக் கஷ்யப். மாலையில் பேப்பரில் பார்த்தேன், “குறைந்தது ஒரு ஃபிரேமிலாவது நடித்துவிட்டு அந்த படத்தில் செத்து விட வேண்டும்.” என பேட்டி கொடுத்திருந்தார். காலையில் எழுந்து வந்து கேரவனுக்குள் பார்க்கிறேன் உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். “வந்தாரு என்ன நடித்தாரு என்ன ஏது என்று தெரியவில்லை டப்பு டப்பு என இரண்டு முறை சுட்டாரு” என லியோ படப்பிடிப்பு குறித்து பேசிய மன்சூர் அலிகான் உடனடியாக, “அய்யய்யோ போ மேன் லியோ பற்றி எல்லாம் சொல்ல முடியாது.. சொல்ல முடியாது..” என்றார் தொடர்ந்து அவரிடம், “அந்த முதல் தருணம் எப்படி இருந்தது?” என கேட்டபோது, “நன்றாக அல்வா சாப்பிடுற மாதிரி இருந்தது..” என தனக்கே உரித்தான பாணியில் மன்சூர் அலிகான் பதிலளித்தார். மேலும், "உங்களால் மறக்க முடியாத ஒரு ஷூட்டிங் அனுபவம் என்ன ஏனென்றால் காஷ்மீரில் கடும் குளிரில் நீங்கள் எப்படி இருந்தீர்கள் லியோ படப்பிடிப்பு தளத்தில்..?” எனக் கேட்டபோது, “அது SKIP” என பதில் அளித்து மொத்த அரங்கையும் சிரிப்பொலியால் நிறைய வைத்தார் மன்சூர் அலிகான் அவர்கள். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட மன்சூர் அலிகான் அவர்களின் சிறப்பு நேர்காணலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.