சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் UK ரசிகர்களுக்கு நல்ல செய்தி... ஜெயிலர் பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

UKவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திற்கு சிறுவர்கள் அனுமதி,uk kids are allowed in theatres to watch Superstar rajinikanth in jailer | Galatta

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் தற்போது வெளிவந்து மெகா ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை UK ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அட்டகாசமான புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. தனக்கென தனி பாணியில் வித்தியாசமான டார்க் காமெடி ஆக்சன் என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகி பாபு, விநாயகன், ரெடன் கிங்ஸ்லி, ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி செராஃப், தமன்னா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். விக்னேஷ் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல்.K படத்தொகுப்பு செய்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

கடைசியாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதேபோல் வசூல் ரீதியிலும் நல்ல கலெக்ஷன் செய்தது இருப்பினும் சில எதிர்மறை விமர்சனங்களின் காரணமாக அந்த படத்தையும் இயக்குனர் நெல்சனையும் சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். மறுபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு புகைப்படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற தவறின. இப்படி ஒரு சூழ்நிலையில் இணைந்த இயக்குனர் நெல்சன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலும் இயக்குனர் நெல்சனின் அட்டகாசமான என்டர்டெய்னிங் விஷயங்களும் ராக்ஸ்டார் அனிருத்தின் அதிரடியான இசையும் என மிரட்டலான என்டர்டைனிங் படமாக ஜெயிலர் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தான் எதிர்கொண்ட அத்தனை எதிர்மறை வசனங்களுக்கும் தன் படத்தின் மூலம் நெல்சன் பதில் சொல்லியிருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இயக்குனர் நெல்சனையும் கொண்டாடி வருகின்றனர். 

ரிலீசான முதல் நான்கு நாட்களிலேயே வெளிநாடுகளில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 105 கோடிக்கு மேல் வசூலி திறப்பதாக ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்தது. முன்னதாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸான சமயத்தில் UKவில் இருக்கும் சென்சார் காரணமாக சிறுவர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது UK ரசிகர்களுக்கு நல்ல செய்தி கொடுக்கும் வகையில், வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஜெயிலர் திரைப்படத்திற்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியானது. இதற்காக, படத்தில் சில சின்ன சின்ன விஷயங்கள் நீக்கப்பட்டு 12A சான்றுகள் பெறப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது குறித்து "GOOD NEWS FOR #JAILER FANS UK திரையரங்குகளில் #ஜெயிலர் திரைப்படத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். உங்கள் டிக்கட்டுகளை இன்றே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்." என ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பு இதோ…

 

GOOD NEWS FOR #JAILER FANS
UK திரையரங்குகளில் #ஜெயிலர் திரைப்படத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் சிறுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
உங்கள் டிக்கட்டுகளை இன்றே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
Announcement for Family and Kids
Jailer will be played with 12A certificate
Come together and Enjoy.. pic.twitter.com/lWqMwtmzqQ

— Ayngaran International (@Ayngaran_offl) August 16, 2023