"LOCKED & LOADED"- தளபதி விஜயின் பக்கா ஆக்சன் ட்ரீட் லியோ ரிலீஸுக்கு ரெடி... லோகேஷ் கனகராஜ் & அனிருத் கொடுத்த மாஸ் அப்டேட் இதோ!

தளபதி விஜய்யின் லியோ பட இறுதி கட்ட மிக்சிங் பணிகள் நிறைவு,thalapathy vijay in leo movie final mixing works completed | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மீதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் குறித்த அதிரடியான அறிவிப்பை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து தெரிவித்திருக்கின்றனர். 2வது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் லியோ. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

லியோ படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி இருவரும் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கிறது. அதிரடியான சண்டை காட்சிகள், ACTION PACKED சேசிங் காட்சிகள், மிரள வைக்கும் CG-ல் கழுதைப்புலி உடனான ஒரு மிரட்டலான சண்டைக் காட்சி என மொத்த படம் எப்படி இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் தெள்ளத் தெளிவாக காட்டி இருக்கிறது.

இதுவரை தளபதி விஜயின் திரை பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக அறிவித்த படக்குழுவினர் கிட்டத்தட்ட 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் உலகம் முழுக்களையோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருக்கின்றனர். சமீபத்தில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் லியோ திரைப்படத்தில் வழக்கமான தளபதி விஜய் திரைப்படங்களில் இருப்பது போல பன்ச் வசனங்களோ ஓப்பனிங் பாடலோ ஓப்பனிங் சண்டை காட்சியோ கிடையாது என தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. லியோ திரைப்படத்தின் சென்சார் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட மிக்சிங் பணிகளில் இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மொத்த மிக்சிங் பணிகளும் நிறைவடைந்து இருப்பதாக ராக் ஸ்டார் அனிருத் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்களது ஸ்டைலில் தற்போது புகைப்படத்தோடு அறிவித்திருக்கின்றனர். ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பு LOCKED & LOADED என குறிப்பிட்டு இருவரும் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தது போலவே இந்த முறை லியோ படத்திற்கும் அதிரடியான அறிவிப்பு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் பக்கா ஹிட் உறுதி என உற்சாகமடைந்து இருக்கின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அந்த புகைப்படம் இதோ.
 

Locked & Loaded 🔥🧊#Leo from October 19 pic.twitter.com/Y1PnvvYcaS

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 15, 2023