"தளபதி விஜயின் லியோ பட FDFS!" சிறப்பு காட்சிகள் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட புதிய அரசாணை! விவரம் இதோ

லியோ பட சிறப்பு காட்சிகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு,tamilnadu govt issues special show timings for vijay in leo fdfs | Galatta

தளபதி விஜயின் லியோ பட சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது அது குறித்து முக்கிய அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் நடிப்பில் ரிலீஸ் ரெடியாக இருக்கும் திரைப்படமான லியோ திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்போது வரை எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் லியோ திரைப்படம் தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கிறது.

இன்னும் ஐந்தே நாட்களில் ரசிகர்களுக்கு பக்கா விருந்தாக வெளிவர காத்திருக்கிற இந்த லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இணைந்துள்ள நடிகை திரிஷா கதாநாயகியாக  நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் மேயாத மான், ஆடை, குளுகுளு படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றியுள்ளனர்.  

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வரும் லியோ படத்திற்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்கம் செய்திருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜன் மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய சதீஷ்குமார் லியோ படத்திலும் கலை இயக்கம் செய்திருக்கிறார். வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மிகப்பிரம்மாண்டமாக லியோ திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் எல்லா பணிகளையும் மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். 

முன்னதாக ஓரிரு தினங்களுக்கு முன்பு லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளுக்கு 5 காட்சிகள் வீதம் சிறப்பு காட்சிகளோடு லியோ திரைப்படத்தை திரையிட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சிறப்பு காட்சிகள் குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட அந்த ஆறு நாட்களில் லியோ படத்திற்கான சிறப்பு காட்சி காலை 9AMக்கு தொடங்கப்பட்டு நள்ளிரவு 1.30AMக்கு உள்ளே முடியும் படி 5 காட்சிகளாக திரையிட்டுக் கொள்ளலாம் என அறிவித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Leo First show to begin from 9AM on OCT 19th.@actorvijay @Dir_Lokesh @anirudhofficial@trishtrashers #ThalapathyVijay #Trisha #SanjayDutt #LeoFDFS #LokeshKanagaraj #Leo #LeoFilm #LCU #Anirudh #LeoTrailer #LeoUpdate #LeoDas #Galatta pic.twitter.com/pyEQArr1ln

— Galatta Media (@galattadotcom) October 13, 2023